முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மக்களுக்கு வாக்குறிதிகளை நிறைவேற்றி வருகிறார் கோகுலஇந்திரா பேச்சு

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிவகங்கை செப்.- 17 - முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு அளித்த வாக்குறிதிகளை நிறைவேற்றி வருகிறார். செம்பூரில் 214 இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றினை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா பேசினார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பூரில் தமிழ முதல் அமைச்சர் அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜாராமன் தலைமையுரையாற்றினார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கி பேசுகையில், தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை செயலாக்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டம் காக்களுரில் இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணிகள், ஏழை, எளியவர்களுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் ஆகியவை வழங்கி திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டவாரியாக மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட செம்பூர் கிராமத்தில் எளிய விழாவாக நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு விழாக்களை எளிமையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இத்தகைய விழாக்களுக்கு ஆகின்ற செலவுகளை அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதற்கிணங்க ஒரு சிறிய சாமியானா போட்டு எளிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. முதலைமைச்சர் ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கின்ற சாதாரணத் தொண்டர்கள் எல்லாம் பல்வேறு நிலையில் பொறுப்புகளை வழங்குகிறார்கள். ஒரு தொண்டன் எந்த அளவிற்கு அவருடைய வாழ்வில் உச்சத்தைப் பெறமுடியுமோ அந்த நிலையில் என்னைப் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு வழங்குகின்ற வாய்ப்பை பெற்றமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று நான்கு மாதங்கள் தான் ஆகிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் தரமாக நான்கு மாதத்தில் இந்த மிக்சி, கிரைண்டர்,மின்விசிறி ஆகியவை எல்லாம் தரமாக தயாரித்து இங்கே வழங்கப்படுகிறது. அதேபோல் குடும்பத்தலைவியாக இல்லத்தரசிகளுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் போது அவர்களுக்கு தரமான மடிக்கணிணிகள் (லேப்டாப்) வழங்குவது ஒரு கனவாக உள்ளது. அந்தக்கனவை நிறைவேற்றும் வகையில் இந்தியாவிலேய எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை எல்லாம் தரமாக தயாரித்து வழங்கிட வேண்டும். அந்த விதத்தில்தான் மக்கள் தொகை குறைவாக உள்ள கிராமத்தை தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு அனைவருக்கும் கிடைக்கும். தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.500லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உழவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் சீரியமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவிற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் வகுத்த திட்டம் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் படிப்படியாக கிடைக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாவட்ட செயலாளரும், பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினருமான முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், திருப்புவனம் ஒன்றியச்செயலாளர் எஸ்.பி.கணேசன், பேரவை மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் கண்ணதாசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் வேம்புலிங்கம் வரவேற்றார். சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் துர்கா மூர்த்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்