முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறார் ஜெயலலிதா - ஆர்.பி.உதயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் செப்18 பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கே வழிபாட்டியாக திகழ்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா என்று தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார் ராமநாதபுரம் மாவட்டம் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான இல்லத்தரசிகளுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள், 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை, கிராமப்புற ஏழை, எளியவர்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அருண் ராய்,  தலைமையில்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ; துவங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் இடையன்குளம் கிராமத்தில் 37 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000- மதிப்பில் கறவை மாடுகளும், முதுகுளத்தூர் வட்டம் கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 56 பேர்களுக்கு தலா ரூ. 14,070- மதிப்பிலான மடிக்கணிணிகளையும், பரமக்குடி வட்டம் பந்தப்பனேந்தல் கிராமத்தில் 74 பயனாளிகளுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் உட்பட தலா ரூ.5,145- மதிப்பிலும் அஞ்சாமடை,காச்சான் கிராமத்தில் 30 பயனாளிகளுக்கு தலா ரூ.12,250- மதிப்பிலான ஆடுகளை வழங்கி  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  பேசும்போது தெரிவித்ததாவது:

தமிழக முதல்வர் ; தேர்தல் காலத்தில் தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் சிறப்புத் திட்டங்களை துவங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டததிலும் சிறப்புத் திட்டங்கள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கிராமப்புறத்தில்  பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் அரசு நலத் திட்டங்கள் போய்ச் சேர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு  தமிழக முதல்வர்  சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்கள். மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வகுத்து  அதற்கான நிதியையும் அளித்து திட்டங்களைச் சிறப்பாக  செயல்படுத்தி  வருகிறார்கள். இங்கு வழங்கப்படும் கறவை மாடுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பயனாளிகளுக்கு அளித்து அவர்களே அவர்களுக்குத் தேவையான மாடுகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெண்மைப்புரட்சியை ஏற்படுத்தி கிராமத்தில் வாழ்கின்ற ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றமடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணத்தையும், செயலையும் ஒருங்கினைப்பதற்காகவும், அவர்களுடை மின் ஆளுமையை வெளிப்படுத்தவும், புத்தக சுமையை குறைப்பதற்காகவும் மாண்புமிகு தமிழக முதல்வர்;   மடிகணிணி வழங்க உத்திரவிட்டார்கள். இதன் மூலம் வளர்ந்து வருகின்ற யுகத்தில் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லத்தரசிகளுக்கு தாய்வீட்டுச் சீதனத்தைப் போல் பேன், மிக்ஸி,  கிரைண்டர் ஆகியவைகளை வழங்கியுள்ளார்கள். வழங்கப்பட்ட பொருட்கள் தரமான முறையில் தயாரிக்கப்பட்டவைகளாகும். கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காகவே  தமிழக முதல்வர்  சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கிராமப்புற மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் ; தெரிவித்தார். 

தலைமையுரையில் மாவட்ட கலெக்டர் பேசும்போது தெரிவித்ததாவது:  தமிழக முதல்வர்  கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கறவை மாடுகளையும், ஆடுகளையும்,இல்லத்தரசிகளின் சிரமங்களைப் போக்கும் வகையில் மிக்ஸி, கிரைண்டர், பேன் ஆகியவைகளையும்,  மாணவ, மாணவியர்களின்  வாழ்க்கை முன்னேற்றம் பெறவும், அவர்களுடைய கணிணி அறிவும் முக்கியமாகும். மேலும், இன்றைய உலகத்தில் வேலை என்பது கணிணி அறிவு அடிப்படையில் உள்ளது. ஆகவே அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மடிகணினியையும் வழங்க உத்திரவிட்டுள்ளார்கள். ஆகவே மடிகணிணியை பெற்றுள்ள மாணவ மாணவியர்கள் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு முயல வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் முருகன் ;, பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் . சுந்தர்ராஜ் ;;, முன்னாள் அமைச்சர் .அன்வர்ராஜா  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் மாவட்ட வருவாய் அலுவலர் .க.ஜெயராமன் ; வரவேற்புரை ஆற்றினார்;. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜராஜேஸ்;வரி ; நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்;. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்