தி.மு.க. உறவு முறிவு காங்கிரசுக்கு விடுதலை கிடைத்துள்ளது-இளங்கோவன்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      அரசியல்
EVKS Elangovan 300

சென்னை, மார்ச்.- 7 - சிறிது காலம் வாய் மூடி மெளனமாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.- காங்கிரஸ் உறவு முறிந்தது என்று தி.மு.க. அறிவித்ததை அடுத்து வாய் திறந்துள்ளார். ஆரம்பம் முதலே தி.மு.க. எதிர்ப்பாளரான இளங்கோவன் தி.மு.க. கூட்டணி முறிவு குறித்து தாம் மிகுந்த சந்தோஷம் அடைந்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரியும் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி வருமாறு:-​ மத்திய மந்திரி சபையில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இது தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நல்ல செய்தியாகும். இதன்மூலம் தமிழக காங்கிரசுக்கு மிகப் பெரிய விடுதலை கிடைத்துள்ளது. தனித்து போட்டியிடுவதா அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் விரைவில் முடிவு செய்து அறிவிக்கும். மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு  இளங்கோவன் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: