முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா உள்பட 32 பேர் போட்டி

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.- 1 - மதுரை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா உள்பட 32 பேர் போட்டியிடுகிறார்கள். 3பேரின் மனுக்கள் தள்ளுபடியானது.   மதுரை மாநகராட்சிக்கு வருகிற 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி 29ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் அதிமுக மேயர் வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளர் பாக்கியநாதன், மதிமுக வேட்பாளர் பாஸ்கர சேதுபதி, தேமுதிக வேட்பாளர் கவியரசு, காங்கிரஸ் சிலுவை உள்பட 39 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்களின் பரிசீலனை நேற்று காலை நடந்தது. மதுரை மாநகராட்சி அலுவலகம், கிழக்கு மண்டல அலுவலகம், தெற்கு, மேற்கு மண்டல அலுவலகங்களில் நடந்த மனுக்கள் பரிசீலனையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான நடராஜன் தலைமையில் நடந்தது. இதில் அதிமுக மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளர் பாக்கியநாதன் உள்பட அனைத்து மேயர் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    மேயர் வேட்பாளர்களாக 39 பேர் மனு செய்ததில் சுயேச்சை வேட்பாளர் ஆரோக்கிய ஸ்டீபன், அழகுராஜா என்ற பாரதி கண்ணா (திருநங்கை)தேமுதிக மாற்று வேட்பாளர் பாண்டி ஆகிய 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது வி.வி.ராஜன்செல்லப்பா (அதிமுக) பாக்கியநாதன்(திமுக) கவியரசு(தேமுதிக) சிலுவை(காங்கிரஸ்) பாஸ்கரசேதுபதி(மதிமுக) டாக்டர் ராஜேந்திரன்( பா.ஜ.க) உள்பட 32 பேர் களத்தில் மோதுகிறார்கள். இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 3 ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்