முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுக் கட்சியினர் 61 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.8 - அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை,  சேலம் மேற்கு, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், ம.தி.மு.க.​வைச் சேர்ந்த தலைமை நிலையச் செயலாளர், மாநில மாணவர் அணி முன்னாள் செயலாளர், தலைமைக் கழகப் பேச்சாளர், தாம்பரம் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை கழகத்திற்கு ஆதரவாக வாபஸ் பெற்ற மதிமுக வேட்பாளர் குபேரா ஜெய்சங்கர், திரைப்பட நடிகர் தியாகு உட்பட மொத்தம் 61 பேர் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஓமலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  ஆர்.ஆர். சேகரன் தலைமையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில மாணவர் காங்கிரஸ் செயலாளர் சி. பிரதீஸ், சேலம் மேற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் கே.கே. ராஜி,  எம். செந்தில்நாதன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.பி. தர்மலிங்கம், பழனிசாமி, மாதேஸ்வரன், சி. சந்திரன்,  நாசர் அலி, கே. ஜெகதீஸ்வரன், மாவட்டப் பொருளாளர் ஆர். சந்திரமோகன், இளைஞர் காங்கிரஸ் இணைச் செயலாளர்  வி.கே. பழனிவேலு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர் கே.சுமதி, தாரமங்கலம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்  லட்சுமணன், பி.என். பட்டி, ஓமலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 28 பேர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அதே போல், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். குருநாதன் தலைமையில், ம.தி.மு.க.​வைச் சேர்ந்த தென் சென்னை மாவட்டப் பொருளாளர் எஸ்.என். ராஜேந்திரன், மாநில மாணவர் அணி முன்னாள் செயலாளர் கங்கை செல்வன், வட சென்னை மாவட்டப் பிரதிநிதி ராம. முருகன், ஆயிரம்விளக்கு பகுதி பொருளாளர் ஜி. சிவநேசன், 113​ஆவது வார்டு மாமன்ற வேட்பாளர் கோமதி சிவநேசன், விருகம்பாக்கம் பகுதி வட்ட துணைச் செயலாளர் ஆர். பேஜில், பகுதி பொருளாளர் வணக்கம் ரகுபதி, 117​ஆவது வட்டச் செயலாளர் பி. கோபால் மற்றும் திருப்nullர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரம்,  எம். தேசிகாமணி, டி. ரவிச்சந்திரன், ஆர். ராஜ்குமார் உள்ளிட்ட 24 நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். 

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், சென்னிமலை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவருமான கே. சின்னச்சாமி கவுண்டர் மற்றும்  சி. தமிழ்வாணன், பி.சி. தங்கவேல்,  எஸ். சங்கர் கணேஷ்,  எஸ். கோவிந்தசாமி, கண்ணுசாமி உள்ளிட்ட 6 நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  அப்போது,  ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான கே.வி. இராமலிங்கமும் உடன் இருந்தார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், தாம்பரம் நகர மன்றத் தலைவர் பதவிக்கு ம.தி.மு.க. சார்பில் வேட்பு மனு செய்திருந்த குபேரா ஜெய்சங்கர், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு, கழகப் பொதுச் செயலாளர்,  ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.  அப்போது, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான சின்னையா, தாம்பரம் நகர மன்றத் தலைவர் பதவிக்கான கழக வேட்பாளர் இரா. கரிகாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, சமீபத்தில் தி.மு.க.​வில் இருந்து விலகிய திரைப்பட நடிகர் தியாகுவும், ம.தி.மு.க.​வைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் காஞ்சி பாஸ்கரும், தனித் தனியே நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  இந்நிகழ்வுகளின் போது, கழக மகளிர் அணி துணைச் செயலாளரும், தமிழ் நாடு சமூக நல வாரியத்தின் தலைவருமான சி.ஆர். சரஸ்வதியும் உடன் இருந்தார்.

ஆக மொத்தம் 61 பேர் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாரும், முதலமைச்சகருமான ஜெயலலிதாவை, மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்ததோடு, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அவர்களுக்கான கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். கருணை உள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்