முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில இந்திய கைப்பந்து: மத்திய ரயில்வே அணி வெற்றி

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, அக்.8 - சென்னையில் துவங்கிய அகில இந்திய கைப்பந்துப் போட்டியில் மத் திய ரயில்வே பெண்கள் அணி வெற்றி பெற்றது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மேற்கு ரயில்வே அணியை தோற்கடித்தது. இது பற்றிய விபரம் வருமாறு - நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில், பனி மலர் மற்றும் பி. ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்துப் போ   ட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் அரங்கத்தில் கடந்த 5-ம் தேதி மாலை துவங்கியது. 

மாலை 5.30 மணிக்கு நடந்த தொடக்க விழாவுக்கு போட்டி அமைப் புக் குழு தலைவரும், தமிழ்நாடு தடகள சங்க தலைவருமான டபிள்யு. ஐ. தேவாரம் தலைமை தாங்கினார். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலா ளர் எம். விஜயகுமார் சிறப்பு விருந்தினராக ககலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். 

பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனரும், போட்டி அமைப்புக் குழு சேர்மனுமான சி. சக்திகுமார், முன்னாள் போலீஸ் ஐ.ஜி. செண்பகராமன், வருமான வரி துணை இயக்குனர் வி. நந்தகுமார், போஸ் நினைவு மருத்துவமனை இயக்குனர் ஏ. அஜித் போஸ் போட்டி அமை ப்பு குழு செயலாளர் ஏ.கே. சித்திரைப் பாண்டியன் ஆகியோர் விழா வில் கலந்து கொண்டனர். 

இந்தப் போட்டியில் பெண்கள் பிரிவில் 4 அணிகளும், ஆண்கள் பிரிவி ல் 20 அணிகளும் பங்கேற்றன. ஆண்களுக்கு முதல் முறையாக (டிரிபி ன்ஸ்) 3 பேர் முறையில் போட்டி நடந்தது. 

பெண்கள் பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் மத்திய ரயில்வே, மே ற்கு ரயில்வே அணிகள் மோதின. இதில் மத்திய ரயில்வே 25 - 14, 25 -18, 18 - 25, 25 - 19 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

மற்றொரு ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணியும், கேரள மின்சார வாரிய அணியும் சந்தித்தன. இதில் தெற்கு ரயில்வே அணி வெற்றிக் காக கடுமையாக போராடிய து. இறுதியில் அந்த அணி 25 - 23, 25 - 21, 23 - 25, 18 - 25, 16 - 14 என்ற செட் கணக்கில் மின்வாரிய அணியை தோற்கடித்தது. 

ஆண்கள் பிரிவில், மத்திய கலால் வரி 25 - 18, 25, 28 என் ற கணக்கில் எஸ். ஆர். எம்.ஏ. அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில், எஸ். டி.ஏ.டி. பி அணி 29 - 27, 25 - 27, 25 - 22 என்ற கணக்கில் இந்தியன் வங் கியையும், சுங்க இலாகா 25- 15, 25 - 18 என்ற கணக்கில் சென்னை நகர போலீசையும் தோற்கடித்தன. 

மற்ற ஆட்டங்களில் ஆந்திரா, ஐ.சி.எப். (ஏ), தமிழ்நாடு போலீஸ் (ஏ) கேரள மின்சார வாரியம் (ஏ), தெற்கு ரயில்வே அணிகள் வெற்றி பெ ற்றன. இந்தப் போட்டி வரும் 9 -ம் தேதி வரை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்