முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50,000 இளைஞர்களுக்கு வேலை: நரேந்திர மோடி

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

காந்திநகர், அக்.8 - இந்த ஆண்டு அரசு பணிகளில் 50,000 இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். இவர் பதவியேற்று நேற்றுடன் 10 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது குஜராத் முதல்வரான நரேந்திர மோடியின் அரசு. இதையொட்டி பல சலுகைகளை அவரது அரசு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 2,250 கோடி அளவுக்கு பல சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4.53 லட்சம் அரசு ஊழியர்களும், 3.47 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். இவர்களுக்கு 3 வது தவணையாக அரியர்ஸ் தொகை ரொக்கமாக கிடைக்கும். மேலும் முதல்வர் மோடி அரசு 7 சதவீத அகவிலைப் படி உயர்வையும் அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த உயர்வு இந்த ஆண்டு ஜூலை 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதன்படி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவை தொகை ரொக்கமாக வழங்கப்படும். 

தற்போது குஜராத் அரசு ஊழியர்கள் 51 சதவீத அகவிலைப் படியை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் அரசு பணிகளில் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அறிவித்து இளைஞர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் நரேந்திர மோடி. மேலும் பல்வேறு சலுகைகளையும் அவர் அறிவித்துள்ளார். இந்த சலுகைகளை அம்மாநில மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago