தொலைத் தொடர்பு த் துறைக்கு சி.பி.ஐ. உத்தரவு

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக். 7 - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது வீட்டு உபயோக த்திற்காக, 300 -க்கும் மேற்பட்ட தொலை பேசி இணைப்புகளை பெ ற்று அவற்றை சன் டி.வி. அலுவலகத்திற்கு சட்ட விரோதமாக பயன்ப டுத்தியதாக புகார் கிளம்பியதை அடுத்து இந்த இணைப்புகள் தொடர் பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு மத்திய தொலைத் தொடர்பு த் துறைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய அமைச்சரவையில், தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். 

அப்போது, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, தனது வீட்டி ற்கு 323 பி.எஸ்.என். எல். தொலை பேசி இணைப்புகளை சட்ட விரோதமாகவும், ரகசியமாகவும், பெற்றதாக கூறப்படுகிறது. இந்த தொலை பேசி இணைப்புகளை சன் டி. வி. அலுவலகத்தின் பயன்பாட் டிற்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ. 700 கோடி இழப்பு ஏற்ப ட்டு உள்ளதாகவும், மத்திய தொலைத் தொடர்புத் துறை ஊழியர் சங் கங்கள் குற்றம் சாட்டி உள்ளன. 

இதையடுத்து இந்த தொலை பேசி இணைப்புகளை வழங்கியதற்கான ஆவணங்களை தொழில் நுட்ப குறிப்புகளுடன் தங்களிடம் ஒப்படை க்க வேண்டுமென்று மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: