முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே விட மறுத்து தயாநிதிமாறன் வீட்டுகாவலாளிகள்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 11 - தயாநிதிமாறன் வீட்டுக்கு நேற்று அதிகாலை 7 மணிக்கு சோதனைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். தயாநிதிமாறன் வீட்டு வாசலில் பெரிய இரும்பு கதவு உள்ளது. அதை தட்டிய சி.பி.ஐ அதிகாரிகள் தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என்றும் ரெய்டுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் செக்யூரிட்டி அவர்களை உள்ளே விட மறுத்து விட்டார். அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் கதவை இடித்து ஆத்திரமாக கதவை திறக்கும் படி எச்சரித்தனர். அதற்கும் மசியாத செக்யூரிட்டி தான் உள்ளே சென்று கேட்டு விட்டுத்தான் திறக்க முடியும் என்று கூறிவிட்டார். தயாநிதிமாறன் வீடும் கலாநிதிமாறன் வீடும் ஒரே காம்பவுண்டில் பக்கத்து பக்கத்து  தெருக்களில் உள்ளது. தயாநிதிமாறன் வீட்டுக்குள் சென்றால் உள்ளேயே புகுந்து அடுத்த தெருவில் உள்ள கலாநிதிமாறன் வீட்டுக்கு செல்ல முடியும். சி.பி.ஐ. அதிகாரிகள் தயாநிதிமாறன் வீடு அமைந்துள்ள வாசல் வழியாக மட்டுமே உள்ளே நுழைய போராடி கொண்டிருந்தனர். மறும்புறம் உள்ள கலாநிதிமாறன் வீட்டு வழியை மறிக்காமல் விட்டு விட்டனர். ஆனால் காலதாமதத்தை ஏற்படுத்தியதன் காரணமாக தாயநிதிமாறன் இல்லத்திலிருந்து கலாநிதிமாறன் வீடு வழியாக யாரும் வெளியே சென்றிருக்கலாம் ஆவணங்களை கூட எடுத்து செல்ல வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் தற்போது எம்.பி.யாக இருப்பவர் வீட்டுக்குள் சோதனைக்கு வரும் சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுப்பது இவர்கள் அடாவடி இன்னும் அடங்கவில்லை என்பதையே காட்டுகிறது.
கடைசியில் வெளியிலிருந்து உள்ளே வந்த வேலைகாரரை அனுமதிக்க செக்யூரிட்டி கதவை திறந்தபோது அவரை சேர்த்து தள்ளி கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்