முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது-சோனியா

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். - 12 - சோனியா காந்தி தலைமையிலான தேர்தல் ஆலோசனை கவுன்சில் கூட்டம் வரும் 21 ம் தேதி நடைபெறவுள்ளது.  இதில் வறுமைக்கோடு நிர்ணய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய பின் நடைபெறவுள்ள முதல் ஆலோசனை கூட்டம் இது. கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி நடந்த கூட்டத்தில் கிராமங்களில் நாளொன்றுக்கு 25 ரூபாய்க்கு மேலும் வருமானம் உள்ளோர் வறுமைக்கோட்டுக்கு மேலுள்ளவர்களாக கருதப்படுவர் என மத்திய திட்ட கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்கள் அருண்ராய், ஹர்ஸ்மந்தரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நடைபெறவுள்ள தேசிய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்