முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கு வேட்பாளர்ருக்கு ஆதரவாக நடிகர் செந்தில் பிரச்சாரம்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், அக். - 12 - மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து திருநகரில் நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார்.  திருநகர், மகாலெட்சுமி காலனி, ஈஸ்வரி நகர், ஜோசப் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது,  ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களில் பல தரப்பட்ட மக்களை சென்றடையும் வகையில் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர். முந்தைய தி.மு.க ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் உள்ளிட்ட திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளை செய்து அந்த பணத்தில் வெற்றி பெற்று விடுவோம் எனக் கூறி தேர்தலை சந்தித்தனர். ஆனால் மக்கள் அதனை பொய்யாக்கி விட்டனர். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மாநில ஜெ. பேரவை செயலாளர் நம்பிராஜன், முன்னாள் எம்.எல்.ஏ சீனிவேல், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ராமசுப்பு, முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருநகர் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்