முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ராஜினாமா நடாகம் ஒரு நாள் தள்ளிவைப்பு

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - கூட்டணி முறிவு விலகல் என்று ஊடல் காட்டிய கருணாநிதி ராஜினாமா நாடகம் நடத்த தி.மு.க. தரப்பு மத்திய மந்திரிகளை ராஜினாமா கடிதத்துடன் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற ஒரு வார்த்தைக்காக தவம் கிடந்த தி.மு.க. தலைவர்களுக்கு அவர்கள் எண்ணப்படியே காங்கிரஸ் பிரணாப்முகர்ஜி மூலம் சிக்னல் காட்டியதும், உடனே செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் தரப்பில் பேசியுள்ளார் என்று சந்தோஷமாக தெரிவித்தனர். காங்கிரஸ் ஒரு படி முன்னேறி உள்ளதால் தங்கள் தரப்பு முன்னேற்றத்தை தெரிவிக்க தங்கள் ராஜினாமா நாடகத்தை ஒரு நாள் ஒத்தி வைத்துள்ளனர்.

ஆரம்பம் முதலே தி.மு.க. காங்கிரஸ் உறவு மேலும் இனித்தாலும் உள்ளுக்குள் வேம்பாக கசந்து கொண்டிருந்தது. கருணாநிதி பூசி மழுப்பி மூடி மறைத்தாலும் அது வெடிக்கவே செய்தது. ஐவர் குழு என்ற ஐவாஷ் குழு அமைத்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியபோது தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காங்கிரஸ் தொடர்ந்து அதை நீடித்து மேலும் மேலும் அதிர்ச்சி கொடுத்தது. கருணாநிதி விலகல் தீர்மானத்தில் சொன்னதுபோல் கருணாநிதியும், கழகமும் எந்த காலத்திலும் சந்திக்காத சோதனையாக அது அமைந்தது.

ஒரு கட்டத்தில் சீட்டு பேரம் என்பதை தாண்டி தனது மகள் கனிமொழி துணைவியார் ராஜாத்தி அம்மாள் மீது சம்மன் பாயாமல் இருக்க காங்கிரசை கருணாநிதி வலியுறுத்த தொடங்கினார். இதை வைத்து விலக கருணாநிதி முடிவெடுத்தார். மறுபுறம் காங்கிரசின் எண்ணம் வேறாக இருந்தது. தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் கேரளா, மேற்கு வங்காளத்தில், பாண்டிச்சேரியில், அஸ்ஸாமில் காங்கிரஸ் ஸ்பெக்ட்ராம் ஊழலில் திளைத்து தி.மு.க.வுடன் கைகோர்த்து வருவது எதிர்க் கட்சிகள் பிரச்சாரத்தில் பிரதானமாக இருக்கும் ஆகவே தமிழ்நாட்டை மட்டும் பார்த்தால் மற்ற மாநிலங்களை கோட்டைவிட வேண்டி இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்டாலும் மற்ற 4 மாநிலங்களில் ஊழல் தி.மு.க.வை கைகழுவி விட்டோம். ராசா மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறி தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க.வுடன் தொகுதி ஒதுக்கீட்டை காரணமாக வைத்து முரண்டு பிடித்தனர். இரு தரப்பிலும் மறைமுகமாக வேறு காரணம் இருந்தாலும் 3 சீட்டுக்காக உடைத்ததாக விலகல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றினார்.

காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. விலகல் நாடகம் நடத்தினாலும், ராஜினாமாவை திங்கட்கிழமை வரை தள்ளி வைத்து காங்கிரஸ் இறங்கி வராதா என்று காத்திருந்தார். பின்பு ராஜினாமா லட்டரை பிரதமருக்கு பேக்ஸ் அனுப்பாமல் அனைவரையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

இடையில் குடும்ப தொலைக்காட்சி முதல் அனைத்து சொந்த தொலைக்காட்சிகளிலும் அறிவாலயம் பக்கம் 5 பேர் கும்பலாக சென்றால் கூட அழைத்து வந்து பாரீர், பாரீர் அரசியல் கட்சிகள் அமைப்புகள் எல்லாம் காங்கிரஸ் வெளியேறியதால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று காட்டிய கூத்தும் நடந்தது.

கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அறிவாலயத்திற்கு வந்து கருணாநிதியை கட்டி பிடித்து ஒப்பாரி வைத்து விட்டு வெளியே வந்து காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் தி.மு.க. பெரும்பலம் பெற்று விட்டதாகவும் தாங்கள் மிகுந்த சந்தோஷமாக உள்ளதாகவும் கூறிக்கொண்டனர்.

இதில் மிகப்பெரிய காமெடி: தி.மு.க. செய்தி தொடர்பாளர்? திராவிடர் கழக தலைவர் வீரமணியின் அறிக்கைதான். உலக தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை சந்தோஷப்படுகின்றனர் என்று கூறி காமெடி பண்ணினார். அப்படியானால் தி.மு.க. காங்கிரஸ் உறவை உலக தமிழர் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை இது நாள் வரை வெறுத்து வந்தார்களா என்று கேட்க தோன்றுகிறது.

திருமாவளவனும் தனது பங்கிற்கு கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க. அணிக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை நினைக்க மறந்து விட்டார்கள். அதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாத புத்தி. தங்கள் குடும்பத்திற்கு பங்கம் வராமலிருக்க கழகத்தை அடகு வைக்க தயங்க மாட்டார் என்பதுதான் அது.

இதுதான் நேற்றைய தினம் டெல்லியில் நடந்தது. இவர்கள் ராஜினாமா லட்டரை கையில் வைத்து கொண்டு கொடுக்காமல் மீடியாக்களை அழைத்து பேசிக்கொண்டு இருந்ததும் காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜி, ஆசாத் ஆகியோர் கருணாநிதியிடம் பேசியதும் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.

``வரும் ஆனா வராது'' என்று வடிவேல் படத்தில் வரும் காமெடி போல் இவர்கள் கூட்டணி கதை மாறிபோனது.

இறுதியில் ராஜினாமாவை எப்படியும் மாலைக்குள் கொடுத்து தானே ஆகவேண்டும் அப்ப முடிவு வரத்தானே போகுது என்று செய்தியாளர்கள் காத்திருந்தனர்.

வீரவசனம் பேசுவதும் காலில் விழுவதும் காலை வாருவதும் எங்களுக்கு கை வந்த கலை வீரவசன படலம் முடிந்ததால் தற்போது காலில் விழும் படலம் என்று காங்கிரஸ் இறங்கி வருவதற்கு தோதாக 1 நாள் ராஜினாமா நாடகத்தை தள்ளி வைத்ததாக முடிவில் அறிவித்துள்ளனர். ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் ஒரு நாள் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

இப்பொழுது அடிமட்ட தி.மு.க. தொண்டனின் கேள்வி எல்லாம் தலைவா காங்கிரஸ் வெளியேறியதால் சந்தோஷப்படுவதாக ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து படம் பிடித்து காட்டினீர்களே இப்போது மீண்டும் கூட்டணி வந்தால் தொண்டர்களுக்கு எல்லாம் கவலை உங்களுக்கு மட்டும் சந்தோஷமா என்று கேட்கிறான். அதற்கு தயாராக உடன் பிறப்புக்கு கடிதம் தயார் செய்ய தெரியாதா என்ன. நாளை மீண்டும் கூட்டணி சேர்ந்தால் அடிபொடி அமைச்சர்கள் கருணாநிதியின் ராஜதந்திரம் என்று கூறிக்கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்