முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுகோள்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

ஏழாயிரம்பண்ணை, அக்.19 - தமிழக மக்களின் நலன் காக்கும் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த விருதுநகர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள் என மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளரும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் முதல்கட்டமாக நேற்றுமுன்தினம் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். 2ம் கட்டமாக இன்று சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு சேவை மனப்பான்மை கொண்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை தமிழக முதல்வர் களத்தில் நிறுத்தியுள்ளார். கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி சாதனைப் படைத்துள்ளார். ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மாணவ,மாணவியருக்கு லேப்டாப், விவசாயிகளுக்கு கறவை மாடு, ஆடுகள் போன்ற சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இத்திட்டங்கள் குறித்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் மக்களிடையே விளக்கிக்கூறி ஆதரவு திரட்டியுள்ளனர். கிராமங்களில் உள்ள ஏழை,எளிய மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் சென்று சேரவேண்டும் என்பதே முதல்வரின் நோக்கமாகும். இந்த வகையில் கிராமங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்களிலும் அ.திமு.க. நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் முதல்வரின் எண்ணம் ஈடேறும். மேலும் அப்பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் அமைச்சர்களுக்கோ, முதலமைச்சருக்கோ தெரிவிக்க வேண்டுமெனில் அது அ.தி.மு.க. நிர்வாகிகலால் தான் சாத்தியமாகும். எனவே விருதுநகர் மாவட்ட வாக்காளர்கள் முதல்கட்ட தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தது போல் இந்த 2ம் கட்ட தேர்தலிலும் வாக்களித்து முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டுகிறேன். உங்கள் பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளை உடனுக்குடன் அமுல்படுத்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியத்திலும், 7 நகராட்சியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அமரவைக்கப்பட வேண்டும். இவ்வாறு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்