முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

125 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்போம்: அத்வானி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

நகரி, அக்.21 - ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப்பணம் ரூ. 125 லட்சம் கோடியை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரத யாத்திரையில் அத்வானி தெரிவித்தார். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ஐதராபாத்தில் ரதயாத்திரை நடத்தினார். அப்போது அவருக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று பல லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துவருகிறது. இதனால் நாட்டில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூபாய் 125 லட்சம் கோடி உள்ளது. அந்த கறுப்புப் பணம் முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மீட்கப்படும். அந்த பணத்தைக் கொண்டு நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பள்ளி, மருத்துவமனைகள் போன்றவற்றை அமைப்போம். நம்மைவிட சீனா அதிகமாக முன்னேறி வருகிறது. இதற்கு காரணம் அந்நாட்டு அரசு இளைஞர் சக்தியை மிக நன்றாக பயன்படுத்தி வருவதுதான். ஆனால் காங்கிரஸ் அரசு இளைஞர் சக்தியை சிறிதளவுகூட பயன்படுத்தாமல் இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

ரதயாத்திரை ஐதராபாத் ரஜ்வேல்பகுதிக்கு வந்தபோது நடிகை விஜயசாந்தி அத்வானியை சந்தித்து பேசினார். பின்னர் விஜயசாந்தி ரதத்தில் இருந்தபடியே கூறியதாவது, தெலுங்கானா தனி மாநிலம் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். காங்கிரஸ் அரசு இருக்கும் வரை தனித் தெலுங்கானா கிடைக்காது. பாரதிய ஜனதாவால் மட்டுமே தெலுங்கானா மாநிலத்தை தரமுடியும். ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க. கட்சி தனித் தெலுங்கானாவை ஆதரித்து வருகிறது. இதனால் தெலுங்கானாவுக்கு யாத்திரை வரும் அவருக்கு மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் அத்வானியின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஐக்கிய ஆந்திரா கூட்டு போராட்டக் குழு தலைவர் பேராசிரியர் சாமுவேல் கூறும்போது, தெலுங்குபேசும் அனைவரும் ஒற்றுமையாக ஒரே மாநிலத்தில் இருப்பதையே விரும்புகிறோம். ஆந்திராவை பிரிக்கத் துடிக்கும் அத்வானியின் ரத யாத்திரை தடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்