முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் நகராட்சியை அதிமுக கைப்பற்றி சாதனை

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், அக்.22 - விருதுநகர் நகராட்சியை முதன்முறையாக அதிமுக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் சாந்தி 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். இதுபற்றிய விபரம்வருமாறு விருதுநகர் நகர்மன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கிய முதல் ரவுண்டில் இருந்தே அதிமுக முன்னிலை வகித்தது. முதல் ரவுண்டில் 1447 வாக்குகளும், இரண்டாவது ரவுண்டில் 1622 வாக்குகளும், மூன்றாவது ரவுண்டில் 1353 வாக்குகளும், நான்காவது ரவுண்டில் 1136 வாக்குகளும், ஐந்தாவது ரவுண்டில் 1955 வாக்குகளும், ஆறாவது ரவுண்டில் 1263 வாக்குகளும், ஏழாவது ரவுண்டில் 820 வாக்குகளும், எட்டாவது ரவுண்டில் 947 வாக்குகளும், ஒன்பதாவது ரவுண்டில் 926 வாக்குகளும், 10 ரவுண்டில் 45 வாக்குகள் பெற்றார். தபால் ஓட்டு 17 சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 951 வாக்குகள் பெற்றார்.  அதிமுக வேட்பாளர் சாந்தி இவருக்கு அடுத்தபடியாக போட்டியிட்ட பாரதியஜனதா கட்சி ஆதரவு பெற்ற நகர் நல அமைப்பின் வேட்பாளர் வளர்மதியை விட  5 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சியை முதன்முறையாக அதிமுக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.  வெற்றிபெற்ற சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.

அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றிபெற்றதையடுத்து நகர்முழுவதும் அதிமுகவினர் பட்டாசுவெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்