முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் கலெக்டர் சகாயம் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.- 25 - சிறப்பு வாக்களாளர் திருத்தம் பட்டியலை நேற்று மாவட்ட கலெக்டர் சகாயம் வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், வரும் 1.1.2012 -ம் நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற உள்ளது. அதன்படி நேற்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க திருத்திட, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரிகளை மாற்றிட படிவம் 6,7,8,8ஏ, ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து  வரும் 8.11.2011 க்குள் வழங்கிடவேண்டும். பட்டியலில் பெயர்கள் இல்லாதவர்கள் பெயர்களை சேர்த்திட படிவம் 6 -ம், நீக்கம் செய்திட, படிவம் 7-ம், திருத்தம் செய்திட படிவம் 8-ம், ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றிட படிவம் 8-ஏ, பூர்த்தி செய்து அந்தந்த மையங்களிலும், வட்டாட்சியர், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களிலும் அளித்திடலாம். வரும் 29 -ம் தேதி மற்றும் 31-11.2011 ஆகிய நாட்களில் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் பாகங்களை கிராமசாப, உள்ளாட்சிஅமைப்புகள், குடியிருப் போர் நலச்சங்க கூட்டங்களில் படித்து காட்டி பெயர்களை சரிபார்த்திட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக்கொள்ள 30.11.2011 மற்றும்6.11.2011 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும், சிறப்பு முகாம்களை நடைபெற உள்ளது. படிவங்களை பூர்த்தி செய்து அளித்திட வரும் 8.11.2011 அன்றே கடைசி நாளகும், அனைத்து நடவடிக்கைகளை முடித்து 5.1.2012 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில பெயர்களை சேர்த்திடவும், நீக்கிடவும், திருத்தம் செய்திடவும், உரிய தேதிகளுக்குள் அளித்திடவும், பொதுமக்களும், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்  மாவட்ட கலெக்டர் சகாயம் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்