முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாமாயில் ஊழல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

கொச்சி,நவ.2 - வெளிநாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டியிடம் விசாரணை நடத்தக்கோரும் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை கேரள ஐகோர்ட்டு தள்ளிவைத்தது. கேரள மாநிலத்தில் கடந்த 1991-ம் ஆண்டு கருணாகரன் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது கருணாகரன் அமைச்சரவையில் தற்போது முதல்வராக இருக்கும் உம்மன்சாண்டி நிதி அமைச்சராக இருந்தார். அதனால் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக உம்மன்சாண்டியிடம் விசாரிக்க கடந்த ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி திருவனந்தபுரம் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு நீதிபதி பி.கே. ஹனீபா உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிஜி தாமஸ்சன் கொச்சி ஐகோர்ட்டில் ரிட்மனுத்தாக்கல் செய்தார். இதனையொட்டி லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு உத்தரவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி ஐகோர்ட்டு தடை விதித்தது.  இந்த ரிட்மனு மீதான விசாரணை நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் இந்த வழக்கை விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேமாதிரி முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், பாரதிய ஜனதா தலைவர் அல்போன்ஸ் கண்ணன்தனம் ஆகியோர் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அரசு கோரியபடி வழக்கை விரைவில் முடிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அச்சுதானந்தன் தாக்கல் செய்த மனுவில் முதல்வர் உம்மன்சாண்டியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிஜி தாக்கல் செய்துள்ள மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனையொட்டி வழக்கு விசாரணையை மறு தேதி குறிப்பிடாமல் நீதிபதி கே.டி.சங்கரன் ஒத்திவைத்தார். 

கருணாகரன் முதல்வராக இருந்தபோது மலேசியாவில் இருந்து கேரளாவுக்கு 32 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் அரசுக்கு 2.32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் ஜிஜி தாமஸ்சன் 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்