முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஹஜ் பயணிகள் மேலும் 10 பேர் மரணம்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், நவ.- 8 - கடந்த 3 நாட்களில் மெக்கா, மதீனா நகரங்களில் புனித பயணம் மேற்கொண்ட இந்திய ஹஜ் பயணிகள் மேலும் 10 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்ட பயணிகளின் இறப்பு எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டனர். இந்த ஹஜ் பயணத்தின்போது பல்வேறு காரணங்களால் ஏற்கனவே 73 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனா நகரங்களில் மேலும் 10 ஹஜ் பயணிகள்  மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து மரணமடைந்த இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலியான 10 ஹஜ் பயணிகளில் இரண்டுபேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். மரியம் பீவி (வயது 62), அப்துல் வாஜீத் (61) என்ற இந்த இரு இஸ்லாமியர்களும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். காஷ்மீரைச் சேர்ந்த 4 ஹஜ் பயணிகளும் ஏற்கனவே பலியாகி உள்ளனர். மரணமடைந்த ஹஜ் பயணிகளில் 17 பேர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.  16 பேர் கேரளாவையும், 8 பேர் மகாராஷ்ட்ராவையும், 7 பேர் பீகாரையும் சேர்ந்தவர்கள். ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 6 பேர் மரணமடைந்துள்ளனர். அரியானாவைச் சேர்ந்த 4 பேரும், குஜராத்தைச் சேர்ர்ந்த 3 பேரும், அஸ்ஸாம், கர்நாடகா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா 2 பேரும் மரணமடைந்துள்ளனர். ஜார்க்கண்ட், தமிழ்நாடு, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு ஹஜ் பயணியும் மரணமடைந்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!