முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கை வாபஸ் வாங்கக்கோரி காங்கிரசார் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.11 - சென்னையில் உள்ளாட்சி தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து இளைஞர் காங்கிரசார் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சொந்த கட்சிக்காரர்கள் மீதே வழக்கு போட்டனர். வாபஸ் வாங்கக்கோரி இளைஞர் காங்கிரசார் சத்தியமூர்த்தி பவனில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இது பற்றி விபரம் வருமாறு:-

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் தரப்பில் இளைஞர் காங்கிரசாருக்கு என்று தனியாக தொகுதிகல் ஒதுக்கப்பட்டது. இதில் 114-வது வட்டத்தில் வாசன் குருப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அவரும் வேட்பு மனுதாக்கல் செய்து கட்சி அங்கீகார கடிதமான பி.படிவத்தை பெற்று பெற்றனர்.

ஆனால் பி.படிவத்தை தேர்தல் அதிகாரியிடம் வழங்க செல்லும்போது உங்களுக்கு காங்கிரஸ் சின்னம் கிடையாது, அன்பழகன் என்பவருக்கு கட்சி அங்கீகாரம் அளித்து பி.படிவம் தந்துள்ளது என்று தேர்தல் அலுவலர் கூறிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் காங்கிரசார் சுமார் 100 பேர் வேல்முருகன், ரியான்பசீர் தலைமையில் கடந்த அக்.14-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் நுழைந்து சூறையாடினர். காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கருப்பு கொடி ஏற்ற முயன்றனர். பின்பு அலுவலகத்துக்குள் புகுந்து தங்கபாலு அறை, செய்தியாளர் சந்திப்பு அறை கண்ணாடிகளை உடைத்தெரித்தனர். தங்கபாலு உருவபடத்தை தூக்கி போட்டு உடைத்தனர்.

இது பற்றி அலுவலக நிர்வாகி மக்பூல்ஜான் அளித்த புகாரின் பேரில் போலீசார் வேல்முருகன், ரியான்பஷீர், அப்பாஸ் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 6  பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து நேற்று காலை இளைஞர் காங்கிரஸ்  மத்திய சென்னை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசார் சந்தியமூர்த்தி பவனில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை நிலைய செயலாளர் சதாசிவலிங்கம் வேட்பாளரை மாற்றியது இளைஞர் காங்கிரஸ் செயலர் யுவராஜ், தலைவர் கோவிந்தசாமி, பொறுப்பாளர் எஸ்.ஆர்.பாலசுரமண்யம். ஆனால் நீங்கள் தாக்கியது தங்கபாலு அறையை என்று கூறி இளைஞர் காங்கிரஸூக்கு  ஒதுக்கப்பட்ட வார்டு வேட்பாளர் மாற்றத்துக்கு யுவராஜ்தான் காரணம். அவர் வந்து வழக்கை வாபஸ் வாங்க சொல்லட்டும், பிறகு முடிவெடுக்கிறோம் என்று கறராக கூறினார்.

இளைஞர் காங்கிரஸ் செயலாளர் யுவராஜ் கடைசி வரை சத்தியமூர்த்தி பவனுக்கு வரவே இல்லை. மாலை 6.30 மணி அளவில் சதாசிவலிங்கம் வெளியே கிளம்பி விட்டார். வழக்கை வாபஸ் வாங்க முடியாது. சத்தியமூர்த்தி பவனை விட்டு வெளியேறாவிட்டால் அதற்கும் போலீஸ் நடவடிக்கை உண்டு என்று கூறி சென்று விட்டார். இதனால் இளைஞர் காங்கிரசார் செய்வதறியாது நின்று பின்பு கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்