முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணா ஷூட்டிங் பெங்களூரில் படப்பிடிப்பு ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

பெங்களூர், நவ. 13-  நிறுத்தப்பட்டிருந்த ராணா படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. ராணா ஷூட்டிங்கில் பங்கேற்க ரஜினிகாந்த் பெங்களூர் சென்றார். 3 நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ரஜினியின் எந்திரன் படத்தை அடுத்து, ராணா படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதன் தொடக்கவிழா சென்னையில் நடந்தபோது ரஜினிக்கு உடல் நலம் குன்றியது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்nullர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனால் ரஜினியின் நடிப்புலக வாழ்க்கை பற்றி கேள்வி எழுத்தது. இனி அவர் நடிக்க மாட்டார் ராணா படம் கைவிடப்படுகிறது என்றெல்லாம் பேசப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பிய ரஜினி சில நாட்களுக்கு முன் ஷாருக்கானின் ரா ஒன் படத்திற்காக சில மணி நேரம் நடித்தார். இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்டார். அப்போது, சிவாஜி, கமல்ஹாசன் போல் எனக்கு நடிப்பு திறமை கிடையாது. எனது பலமே என்னுடைய வேகம். உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன் என்றார். இந்நிலையில் ராணா பட ஷூட்டிங் பெங்களூரில் 3 நாட்கள் நடக்கிறது. அங்கு நைஸ் ரோடில் நடக்கும் படப்பிடிப்புக்காக நேற்றிரவு விமானத்தில் ரஜினி பெங்களூர் புறப்பட்டு சென்றார். 13-ம் தேதி முதல் 15-ம் தேதி ஷூட்டிங் நடக்கிறது. தீபிகா படுகோனுடனான காட்சிகள் கடைசி 2 நாட்கள் படமாக்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்காக ரஜினி தங்கும் வழக்கமான ஓட்டல் முழுவதும் படப்பிடிப்புக் குழுவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  ரூ.5 கோடி மதிப்பில் பென்ட்லி கன்டினட்டல் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார்கள் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago