முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?- நாராயணசாமி

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, நவ.- 13 -கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூடங்குளம் அணு உலை பிரச்சனை தொடர்பாக மத்திய-மாநில குழுக்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமார் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். அணுமின் நிலைய வளாகத்தில்  1500 விஞ்ஞானிகளின் குடும்பங்கள் தங்கியுள்ளனர். ஆபத்து இருக்குமேயானால் அவர்கள் அங்கு தங்குவார்களா? எனவே வீண் வதந்திகளை பரப்புவதை அவர்கள் கைவிட வேண்டும் என்று நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!