முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டக் குழுவுக்கு எங்கிருந்து பணம்? மத்திய அமைச்சருக்கு உதயகுமார் பதில்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், நவ. 14 கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.  நாகர்கோவில் ரோட்டரி சமூக அரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, 

போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கேட்கிறார். இப்போராட்டத்தை நடத்த மீனவர்கள், விவசாயிகள், தலித் மக்கள் ஆகியோர் தங்கள் சொந்தப் பணத்தை வழங்கியிருக்கிறார்கள். எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நாராயணசாமி தொடர்ந்து பேசினால் அவர் மீது வழக்கு தொடருவோம். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறதா என்பதை மக்களுக்கு அரசுதான் விளக்க வேண்டும். கூடங்குளத்தில் மத்திய குழுவினர் இம்மாதம் 15, 16 மற்றும் 17 தேதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். இப்பிரச்சினையை 3 நாட்களில் ஆய்வு செய்து தீர்வு காண முடியாது.  எனவே கூடுதல் நாட்கள் ஆய்வு செய்ய வேண்டும். கூடங்குளத்தை சுற்றிலும் 30 கி.மீ. தொலைவுக்குள் அனைத்து கிராமங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும். இதை 2 அல்லது 3 மாதங்களில் முடிக்கலாம் என நினைக்கக் கூடாது. மத்திய குழுவிடம் 50 தலைப்புகளில் நாங்கள் கேள்வி கேட்டுள்ளோம். அதற்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பதில்களை தருமாறு வலியுறுத்தி உள்ளோம். கூடங்குளம் விவகாரத்தில் மாநில அரசை நாங்கள் நம்புகிறோம். ஆனால் மத்திய அரசை நம்பவில்லை என்றார் அவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony