முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த 3 பேர் கைது

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர், நவ.17 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ளது ரங்கசாமிபுரம். இங்கு கடந்த 10 ம் தேதி முன்னக்குடி கண்மாயில் இளம்பெண் பிணம் கிடப்பதாக வி.ஏ.ஓ. அக்பர்சேட் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தகவலறிந்த போலீசார் இளம் பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி, கீழவளவு சார்பு ஆய்வாளர் புகழேந்தி ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை கொண்டு சுதந்திரராஜா(21), அபிமன்யூ(19), ஆறுமுகம்(45) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்த போலீசார், அவர்கள் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். கொலை செய்யப்பட்ட மனநலம் பாதித்த பெண் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கைது செய்யப்பட்ட சுதந்திரராஜா மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு குற்றவாளியான ஆறுமுகத்திற்கு 5 பெண் குழந்தைகள் உள்ளன. ஒரு பெண்ணிற்கு திருமணம் முடிந்து விட்டது. சம்பவம் நடந்த நான்கு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மேலூர் டி.எஸ்.பி. மணிரத்னம் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony