முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - அரசு நிலத்தை வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு ஒப்படைத்ததை எதிர்த்து தி.மு.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை தேவையற்றுது என கூறி சென்னை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இது பற்றி விபரம் வருமாறு:- சென்னை மயிலாப்பூரில் கதிட்ரல் சாலையில் உள்ள அரசு நிலத்தை வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு ஒப்படைத்ததை எதிர்த்து தி.மு.க வழக்கறிஞர் புவனேஷ்வர் குமார் தாக்கல் செய்த மனுவை தேவையற்றது எனக்கூறி சென்னை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை ஐகோர்ட் வக்கீல் புவனேஷ்வர்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை கதிட்ரல் ரோட்டில் உள்ள 144 கிரவுண்ட் நிலத்தை 1836-ம் ஆண்டு அரசால் கையகப்படுத்தப்பட்டு அதே ஆண்டு வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்கும்படி வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு சென்னை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து வேளாண் தோட்டகலை சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த நிலத்தை கையகப்படுத்தியது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம் என்று 2010-ம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் கையகப்படுத்திய நிலத்தை குறித்து கலெக்டர் பரிசீலனை செய்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்தின்போது நிர்வாக மாற்றம் நடந்தபோது கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் டி.ஆர்.ஓ. கூடுதல் கலெக்டர் பதவி வகித்தார். அவர் இந்த நிலத்தை குறித்து பரிசீலனை செய்து வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு 2011-ம் ஆண்டு வழங்குவது என்று உத்தரவு பிறப்பித்தார்.

சம்மந்தப்பட்ட 144 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 500 கோடியாகும். வேளாண் தோட்டகலை செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு கலெக்டர் பதவி வகிக்கும் டி.ஆர்.ஓ. இந்த நிலத்தை அந்த சங்கத்திற்கு வழங்கியது சட்ட விரோதமாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றும் நீதிபதி டி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி சென்னை கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், அந்த உத்தரவை பரிசீலனை செய்யவும் தமிழக முதன்மை செயலர் 2011 நவ.1-ந் தேதிக்கு உத்தரவிட்டுள்ளார் என்று கூறி அரசாணையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அப்பொழுது நீதிபதிகள், கலெக்டர் உத்தரவுக்கு ஏற்கனவே அரசு தடை விதித்துள்ளது. டி.ஆர்.ஓ. உத்தரவை மறு ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து வேளாண் தோட்ட கலை சங்கம் ரிட் மனு நிலுவையில் இருக்கும்போது இந்த மனுவை ஏற்று கொள்ள தேவையில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!