முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை மாஜி அமைச்சரின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.20- ஆள் மாறாட்டம் வழக்கு எதிரொலியாக புதுவை முன்னாள் அமைச்சரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கருவடிக்குப்பம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தார். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இவர் தோல்வி அடைந்த சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பாடத்திற்கு தேர்வு எழுத திண்டிவனம் தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்தார்.  அங்கு கடந்த 29.9.2011-ம் தேதி நடந்த அறிவியல் பாடத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கல்யாணசுந்தரம் உள்ளிட்டவர்கள் மீது முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  30-ம் தேதி நடந்த சமூக அறிவியல் பாடத்தேர்வை கல்யாணசுந்தரம் எழுதவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கல்யாணசுந்தரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆள் மாறாட்டம் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டார். இந்த நிலையில் 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் கல்யாணசுந்தரத்தின் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. ஆள் மாறாட்டம் வழக்கு விசாரணையில் இருப்பதால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!