முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காவல் துறையினருக்கும் தனி அங்காடிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.20- இந்தியா முழுவதும் ராணுவத்தினருக்கு என தனி அங்காடிகள் இருப்பதைப் போல தமிழக காவல் துறையினருக்கும் சென்னை ஆவடி, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் தனி அங்காடிகளை அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சட்டத்தின் மாட்சிமையை ஏற்படுத்தி, தமிழகம் ஒரு அமைதிப் nullங்காவாக  திகழ தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா   எடுத்து வரும் பல்வேறு  நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பது காவல் துறை என்று சொன்னால் அது மிகையாகாது.  வெளிநாட்டு பகைவர்களிடமிருந்து நாட்டையும், மக்களையும் காப்பது ராணுவம் என்றால்  உள்நாட்டில் வாழும் சமூக விரோதிகளிடமிருந்து  நாட்டையும் மக்களையும் காப்பது காவல் துறை.  இரவு பகல் பாராமல் நம் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அயராது உழைக்கின்ற காவல்துறைக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கு  ராணுவத்தினருக்கு  என தனியாக அங்காடிகள் இருப்பதைப் போல தமிழக காவல்துறைக்கும் குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் கிடைக்கக்கூடிய வகையில் அங்காடிகளை அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த அங்காடிகளால்   வாங்கப்படும் பொருட்களுக்கும், அவற்றின் விற்பனைக்கும்  மதிப்புக்கூட்டு வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கவும்,    தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். முதற்கட்டமாக இந்த அங்காடிகள், சென்னை, ஆவடியிலுள்ள   படைக்கல மையம்  திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1வது பட்டாலியன்,  மற்றும் மதுரையிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6 வது பட்டாலியன், ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்படும்.   இந்த அங்காடிகள் அமைக்கவும்,   பொருட்கள் வாங்கவும்,   மானியமாக 1 கோடி ரூபாய் வழங்கிடவும்,  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஒய்வு பெற்ற பணியாளர்கள், இவர்களின் குடும்பத்தினர் மற்றும் இறந்து போன காவல்துறை பணியாளர்களின் குடும்பத்தினர் ஆகியோர் இந்த விற்பனை அங்காடிகள் மூலம் பயன் பெறுவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்