முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. - 21 - மருத்துவ படிப்பு தேர்ச்சி தொடர்பாக சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் அமல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இறுதியாண்டு மருத்துவ படிப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் கொண்டு வந்த மதிப்பெண் விதிமுறை செல்லாது என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பை ஏற்று பாதிக்கப்பட்ட மாணவர்களை பயிற்சி மருத்துவர்களாக அனுமதிக்க வேண்டும். ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து மாணவர்களின் படிப்பு காலத்தை விரயமாக்கும் முயற்சியில் பல்கலைக் கழகம் ஈடுபடக் கூடாது. மேல்முறையீடு செய்தால் தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களை பயிற்சி மருத்துவர்களாக அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த சரவணகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்