முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ஜி அலைகற்றை ஊழல்: சுப்ரமண்யசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

புதன்கிழமை, 23 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, நவ.- 23 - 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாகவும், தேசவிரோத கம்பெனிகளுக்கு 2 ஜி அலைக்கற்றைகளை விற்றதாகவும் ப.சிதம்பரம் மீது சுப்ரமண்யசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமண்யசாமி கூறியதாவது:- ப.சிதம்பரத்திற்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளை வைக்கிறேன். முதல் குற்றச்சாட்டு ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்து 2001-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விலைக்கு விற்றுள்ளார். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது டெலிகாம் மந்திரி ஆக ஆ.ராசா இருந்துள்ளார். 2001-ம் ஆண்டு ஜனவரி அன்று பிரதமருக்கு நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுகிறார். அதில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை விற்பனை சம்பந்தமாக தானும் ராசாவும் பொறுப்பு என்று எழுதி உள்ளார். வர்த்தகம் சம்பந்தமான பிரிவு 7 விதியின்படி நிதிஅமைச்சர் டெலிகாம் அமைச்சருக்குள் ஒற்றுமை வராவிட்டால் கேபினட்டுக்கு முடிவை அனுப்ப வேண்டும் என்று விதி இருந்தது. ஆகவே ப.சிதம்பரம் ராசாவுடன் கூட்டாக சேர்ந்து கேபினட் முடிவுக்கு வராமல் முடிவெடுத்து ஸ்பெக்டரம் உரிமையை விற்றனர். இதனால் நாட்டுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ரியாலிட்டி, ஸ்வான், யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் வாங்கிய உரிமைகளை 3 வருடத்திற்கு விற்ககூடாது என்பதை மீறி விற்றனர். லைசென்சை விற்க முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் கம்பெனியை விற்கலாம் என்று ராசாவுக்கு சிதம்பரம் வழிகாட்டி உள்ளார். இதை வாங்கிய கம்பெனிகள் 3 ஆண்டுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்க முடியாது என்ற நிலையை மாற்றி உடனடியாக பல மடங்கு விலைக்கு விற்று லாபமீட்ட வழி செய்துள்ளார். மூன்றாவதாக நிதிஅமைச்சர் சிதம்பரத்திற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கடிதம் எழுதி உள்ளார். அதில் இரண்டு கம்பெனிகள் தேசத்துரோக பட்டியலில் உள்ளவை எடிசாலட், டெலிநோட் ஆகிய கம்பெனிகள் தான் அவை. தயவு செய்து அவற்றுடன் எந்த வர்த்தக உறவு இருந்தாலும் அவைகளை கேன்சல் செய்து விடுங்கள் உள்ளே விடாதீர்கள். எடிசலாட் பாக் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் இந்திய ப்ராஜக்ட்டின் சி.இ.ஓ. ஷபீப் என்பவர் தாவூத் இப்றாஹிமின் ஆள் உள்துறை அமைச்சகத்தின் பிளாக் லிஸ்ட்டில் உள்ள கம்பெனி இது. இதேபோல் டெலினோ டெலிகாம் மிஷனரி சைனாவை சேர்ந்த நிறுவனம் முக்கியமான சமயத்தில் பாதுகாப்பு துறை கம்ப்யூட்டர் செயல்பாடுகளை செயலிழக்க வைத்து விடமுடியும் என்று எச்சரித்தும் அவைகளுக்கு லைசென்ஸ் வழங்கிய ராசாவுக்கு துணை போனார். இந்த 3 குற்றங்களிலும் சிதம்பரத்திற்கு மிகப்பெரிய தண்டனை காத்துள்ளது. வரும் டிசம்பர் 3-ம் தேதி ராசாவுடன் சேர்ந்து ப.சிதம்பரமும் குற்றவாளி என்ற வாதத்தை கோர்ட்டில் எடுத்து வைப்பேன் என்றார். 2008-ம் ஆண்டு ராசாவும் சிதம்பரமும் 4 முறை மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தித்துள்ளனர். நீராராடியாவிடம் டெலிபோனில் ராசா உரையாடும்போது அதிகபணம் கேட்டு சிதம்பரம் நச்சரிப்பதாக பேசி உள்ளார். அப்போது 2001-ம் ஆண்டு அடிப்படை விலையான 1620 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இது பற்றி சி.பி.ஐ.யும் சார்ஜ்ஷீட்டில் குறிப்பிட்டுள்ளது. இதைபெற்ற டாடா 13 மடங்கும் ஏர்செல் 20 மடங்கும் மற்ற நிறுவனங்கள் பலமடங்கு கூடுதல் விலைவைத்தும் விற்றன. இவை அனைத்தும் நிதிஅமைச்சக ஆவணங்களில் உள்ளது. இவை சி.பி.ஐ. வசமும் உள்ளது. 1976-ல் இந்திராகாந்தி கோர்ட்டில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு எம்.பி.பதவி பறிக்கப்பட்டது போல் சிதம்பரம் தண்டிக்கப்படுவது உறுதி. சிதம்பரத்திற்கு எதிராக 17 வழக்குகள் உள்ளது. 35 ஆயிரம் கோடி ரூபாய் அவர் கணக்கில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது.

இவ்வாறு சுப்ரமண்யசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்