முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டுகளுக்குள் 10 அணுமின் நிலையங்கள்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.25 - நாட்டில் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் குறித்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- இந்தியா முழுவதும் தற்போது 19 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 4,650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கூடங்குளம் உட்பட 7 அணுமின் நிலையங்களுக்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அணுமின்  நிலையங்கள் மூலம் 5,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மேலும் 10 புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த திட்ட காலத்திற்கு முன்னதாக அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்