Idhayam Matrimony

பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

புதன்கிழமை, 31 டிசம்பர் 2025      இந்தியா
Google-2025-12-31

புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டு நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும். கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில், நேற்று இரவு 12 மணியுடன் 2025ம் ஆண்டு நிறைவடைந்து, நேற்று நள்ளிரவு 2026வது ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இந்தாண்டு நிறைவு பெற்று ஒரு புத்தம் புதிய ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதைப் பயனர்களுக்கு நினைவூட்டுகிறது. ஒரு அத்தியாயத்தின் முடிவையும் மற்றொரு அத்தியாயத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

பண்டிகைக்காலங்களை குறிக்கும் வகையில், பலூன்கள், வண்ணக் காகிதத் துண்டுகள் உள்ளிட்டவற்றால் 2026 அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கூடி, கடந்த ஆண்டைப் பற்றி சிந்தித்து, புதிய ஆண்டை வரவேற்கின்றனர். விரைவில், 2026ன் தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாகக் குறிக்கும் வகையில் நள்ளிரவு மணி அடிக்கும் என்பதை டூடுல் நினைவூட்டுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து