முக்கிய செய்திகள்

நாகர்கோவில் தொகுதியில் பொன்.ராதா கிருஷ்ணன் போட்டி

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      அரசியல்
pon radha

சென்னை, மார்ச், 11 - தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 131 தொகுதிகளுக்கான இடங்களில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 13ம் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆகியவை பலப்பரீட்சை நடத்த, தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி, வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனியாக களத்தில் குதித்துள்ளது.

பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்க பெறப்பட்டு, அவை டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு மனுக்களை பரிசீலித்து தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல் கட்டமாக 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் எஞ்சிய தொகுதிகளுக்கான 2வது பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். 

முதல்கட்ட பட்டியல் விவரம் வருமாறு:

பொன்.ராதாகிருஷ்ணன்(நாகர்கோவில்), சுஜித்(பத்மநாபபுரம்), ஜெயசீலன்(விலவன்கோடு), வி.ரங்கராஜன்(கோவில்பட்டி), ராஜகோபால்(திருச்செந்தூர்), எஸ்.செல்வராஜ்(ஸ்ரீவைகுண்டம்), ஜி.முருகதாஸ்(திருநெல்வேலி), எஸ்.கார்த்திக் நாராயணன்(பாளையங்கோட்டை), எம்.மகாகண்ணன்(நாங்குனேரி), எஸ்.சுடலையாண்டி(ஆலங்குளம்), என்.ராஜகுமார்(வாசுதேவநல்லூர்-தனி தொகுதி), ஆர்.பாண்டித்துரை(கடையநல்லூர்), எஸ்.வி.அன்புராஜ்(தென்காசி), என்.எஸ்.ராமகிருஷ்ணன்(ராஜபாளையம்), எஸ்.ஆர்.வெற்றிவேல்(அருப்புக்கோட்டை), பி.விஜயரகுநாதன்(திருச்சுழி),

எம்.குமாரலிங்கம்(மதுரை-வடக்கு), ஆர்.கந்தன்(திருப்பரங்குன்றம்), கே.ஸ்ரீனிவாசன்(மதுரை கிழக்கு), எஸ்.பழனிச்சாமி(சோழவந்தான் -தனி தொகுதி), ஆர்.குமார்(ஆண்டிப்பட்டி), எம்.கணபதி(பெரியகுளம்-தனி தொகுதி), எஸ்.என்.வீராச்சாமி(போடிநாயக்கனூர்), பி.லோகன்துரை(கம்பம்), கே.தீனதயாளன்(பழனி), எஸ்.கே.பழனிச்சாமி(ஒட்டன்சத்திரம்), ராஜேந்திரன்(நிலக்கோட்டை - தனி தொகுதி), சி.குட்டியான்(நத்தம்), சுப.நாகராஜன்(பரமக்குடி- தனி தொகுதி), சிவ மகாலிங்கம்(திருவாடணை), கே.சண்முகராஜ்(முதுகுளத்தூர்), வி.சிதம்பரம்(காரைக்குடி), ஷேக் தாவூத்(திருப்பத்தூர்), பி.எம்.ராஜேந்திரன்(சிவகங்கை), வி.விஸ்வநாத கோபால்(மானாமதுரை-தனி தொகுதி), சபாபதி(அறந்தாங்கி), பி.வடமலை(திருமயம்), ஜெகன்னாதன்(ஆலங்குடி),

பாலசெல்வம்(புதுக்கோட்டை), பார்த்திபன்(திருச்சிராப்பள்ளி கிழக்கு), எம்.எஸ்.லோகிதாசன்(லால்குடி), எம்.சுப்பிரமணியன்(மணச்சநல்லூர்), எஸ்.பி.ராஜேந்திரன்(முசிறி), வி.எஸ்.சென்னியப்பன்(அறவக்குறிச்சி), எஸ்.சிவமணி(கரூர்), ஏ.தனசேகரன்(குளித்தலை), டி.பாஸ்கரன்(குன்னம்), பி.அபிராமி(அரியலூர்), எஸ்.கிருஷ்ணமூர்த்தி(ஜெயங்கொண்டம்), ஜெ.சிவக்குமார்(திருவையாறு), எம்.எஸ்.ராமலிங்கம்(தஞ்சாவூர்), ஏ.கர்ணன்(ஒரத்தநாடு), ஆர்.இளங்கோ(பேராவூரணி), பி.எல்.அண்ணாமலை(கும்பகோணம்), டி.மகேந்திரன்(பாபநாசம்), சிவசண்முகம்(திருத்துறைப்பூண்டி), டி.ஆர்.பிங்களன்(திருவாரூர்),

கே.வி.சேதுராமன்(மயிலாடுதுறை), நாஞ்சில் பாலு(பூம்புகார்), எஸ்.கார்த்திகேயன்(வேதாரண்யம்), எம்.வேல்முருகன்(விருத்தாசலம்), கற்பகம் மோகன்(நெய்வேலி), ஆர்.எம்.செல்வகுமார்(பண்ருட்டி), ஆர்.குணா(எ)குணசேகர்(கடலூர்), ஏ.எஸ்.வைரக்கண்ணு(குறிஞ்சிப்பாடி), துரை வெற்றிவேந்தன்(வானூர் - தனி தொகுதி), வி.அருள்(உளுந்தூர்பேட்டை), பி.ராஜசுந்தரம்(ரிஷிவந்தயம்), கே.ஜெயவர்மா(சங்கராபுரம்), கே.டி.ராகவன்(செங்கல்பட்டு), என்.கோபாலகிருஷ்ணன்(திருப்போரூர்), கே.குருமூர்த்தி(உத்திரமேரூர்), எம்.பெருமாள்(காஞ்சீபுரம்), வேதா சுப்பிரமணியம்(தாம்பரம்), வி.வெங்கடகிருஷ்ணன்(திருவொற்றியூர்), ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன்(திருவள்ளூர்), ஜெ.லோகநாதன்(ஆவடி), சென்னை சிவா(மாதவரம்), எம்.ஜெயசங்கர்(துறைமுகம்), ராஜேந்திரகுமார்(பெரம்பூர்), டி.சந்தர்(எ)சந்துரு(ராயபுரம்),

ஜி.தணிகாசலம்(ஆற்காடு), டாக்டர் வி.அரவிந்த் ரெட்டி(வேலூர்), ஜி.வெங்கடேசன்(ஆம்பூர்), எம்.செல்வகுமார்(திருப்பத்தூர்), ஏ.ஜெயராமன்(செங்கம் - தனி தொகுதி), ஏ.அர்ஜூனன்(திருவண்ணாமலை), கே.ரமேஷ்(கலசப்பாக்கம்), டி.தமிழரசி(செய்யாறு), சி.கே.சங்கர்(ஊத்தங்கரை-தனி தொகுதி), கே.அசோகன்(பர்கூர்), கோட்டீஸ்வரன்(கிருஷ்ணகிரி), வி.எஸ்.பிரேமநாதன்(வேப்பணஹள்ளி), கே.பி.கந்தசாமி(பெண்ணாகரம்), கே.பிரகாரன்(தர்மபுரி), எஸ்.ஜெயக்குமார்(பாப்பிரெட்டிபட்டி), சாமிக்கண்ணு(ஹரூர்-தனி தொகுதி), கே.கே.ஏழுமலை(சேலம் மேற்கு), டி.மோகன்(சேலம் வடக்கு), என்.அண்ணாதுரை(சேலம் தெற்கு),

பி.பாலசுப்பிரமணியம்(மேட்டூர்), மதியழகன்(கங்காவள்ளி-தனி தொகுதி), கே.அண்ணாதுரை(ஆத்தூர்-தனி தொகுதி), பொன்.ராஜா(எ) ராஜசெல்வம்(ஏற்காடு-பழங்குடியின தொகுதி), பி.சிவராமன்(ஓமலூர்), பி.தங்கராஜூ(எடப்பாடி), கே.எஸ்.வெங்கடாசலம்(வீரபாண்டி), பி.நடராஜன்(சங்கரி), எல்.முருகன்(நாமக்கல்), சி.ரமேஷ்(சேந்தமங்கலம்-தனி தொகுதி), கே.மனோகரன்(பரமத்தி வேலூர்), பாலமுருகன்(குமாரபாளையம்), பொன்.ராஜேஷ்குமார்(ஈரோடு கிழக்கு), என்.பி.பழனிச்சாமி(ஈரோடு மேற்கு), டி.கதிர்வேல்(மொடக்குறிச்சி), ஏ.பி.எஸ்.பர்குணன்(அந்தியூர்), என்.சென்னையன்(கோபிசெட்டிபாளையம்), என்.ஆர்.பழனிச்சாமி(பவானிசாகர்-தனி தொகுதி), 

ஏ.பார்த்திபன்(திருப்பூர் வடக்கு), என்.பாயிண்ட் மணி(திருப்பூர் தெற்கு), பி.கருணாகரன்(தாராபுரம்-தனி தொகுதி), பி.விஜயராகன்(மடத்துக்குளம்), விஸ்வநாதபிரபு(உடுமலைப்பேட்டை), சி.ஆர்.நந்தகுமார்(கோவை தெற்கு), ராஜேந்திரன்(சிங்காநல்லூர்), ஏ.ஸ்ரீதரமூர்த்தி(தொண்டாமுத்தூர்), வி.கே.ரகுநாதன்(பொள்ளாச்சி), எம்.சண்முகசுந்தரம்(பல்லடம்), ஆர்.நந்தகுமார்(கவுண்டம்பாளையம்), பி.குமரன்(உதகமண்டலம்), அன்பு(எ)அன்பரசன்(கூடலூர் - தனி தொகுதி) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: