முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் லோக்பால் மசோதா வெறும் பெயரளவுக்குத்தான் - கந்தூர்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 6 - மத்திய அரசின் லோக்பால் மசோதா வெறும் பெயரளுக்குத்தான் இருக்கும். ஊழலை ஒழிக்க ஒருபோதும் உதவாது என்று உத்தரகாண்ட் பாரதிய ஜனதா முதல்வர் பி.சி.கந்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.  ஊழலை ஒழிக்கும் வகையில் லோக்பால் மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் பாராளுமன்றம் தொடங்கியதில் இருந்து செயல்படமுடியாமல் முடங்கிப்போய் இருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால் பாராளுமன்றம் செயல்பட முடியாமல் இருக்கிறது. லோக்பால் மசோதா நிறைவேறாமல் செய்வதற்காகவே அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். கைது செய்து சிறையில் அடைத்தாலும் அங்கேயும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் எச்சரித்துள்ளார். இந்தநிலையில் மத்திய அரசின் லோக்பால் மசோதா வெறும் கண்துடைப்பே என்றும் வெறும் பெயரளவுக்கே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இந்த மசோதாவால் ஊழலை நாட்டில் ஒழிக்க முடியாது என்றும் முதல்வவ் கந்தூரி திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் லோக்பால் மசோதாவானது பாராளுமன்ற கமிட்டியின் பரிசீலனையில் இருப்பதால் அதுகுறித்து முன்கூட்டியே எதுவும் பேசுவது சரியாக இருக்காது. ஆனால் லோக்பால் மசோதா குறித்து அரசு தரப்பில் பேசப்படுவதை பார்த்தால் இந்த மசோதா வெறும் பெயரளவுக்குத்தான் என்பது தெரிகிறது. ஊழலை ஒழிக்க முடியாத லோக்பால் மசோதா இருந்து என்ன பயன் ஏற்படப்போகிறது என்றும் கந்தூரி கூறினார். என் மாநிலத்தில் லோக்ஆயுக்தா கோர்ட்டு அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நிர்வாகம் தலையிட முடியாது. பணம் கொடுத்து எந்தவதி வற்புறுத்தலும் செய்ய முடியாத அளவுக்கு இருக்கும் என்றும் கந்தூரி மேலும் கூறினார். மேலும் என் மாநிலத்தில் அண்ணா ஹசாரே கூறுவது போல் முதல்வர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கீழ்கோர்ட்டு நீதிபதிகள் அனைவரையும் விசாரிக்கும் வகையில் ஜன்லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் தவறு செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகப்பட்சம் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் ஆகியோர்களும் இந்த அமைப்பிற்குள் கொண்டு வரப்படும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் கந்தூரி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்