முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு நிதி - இரு அவைகளிலும் அ.தி.மு.க. வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.9 - தமிழகத்துக்கு தேவையான சிறப்பு நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மக்களவையில் செம்மலை, மாநிலங்களவையில் ரபி பெர்னார்ட் ஆகிய அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மக்களவையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் செம்மலை பேசியதாவது, தமிழகத்தில் 3,500 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியும், தொழிற்சாலைகளின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளன. காற்றாலை மின்சாரமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கூடங்குளம் அணுமின் திட்டமும் பிரச்சினையில் உள்ளது. தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து ஓராண்டுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுவரை எந்த பதிலும் இல்லை. கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதியை அளித்து வருகிறது. தமிழகத்துக்கு தேவையான நிதி ஆதாரம், மின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரபி பெர்னார்ட் முதல் முறையாக அவையில் பேசினார். அப்போது தமிழகத்தில் 20 முதல் 35 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க தமிழக அரசு இலவசமாக ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. எளியவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இதனால் ஏழை மக்களின் வறுமை ஒழிக்கப்படும். தமிழகம் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதை போக்க தமிழக முதல்வர் கோரிய சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்