முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைபெரியாறு அணையை ராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்- ஸ்ரீதர்வாண்டையார்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.- 12 - முல்லை பெரியாறு அணையை பாதுகாக்கும் பணிக்கு இந்திய ராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தெரிவித்துள்ளார். இது குறித்து மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்கள், விவசாயித்திற்கு குளத்து நீரையும், மழை நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்துக்கொண்டனர். இதற்கு நிரந்தர தீர்வுக்காணவேண்டி ஆய்வு செய்தபொழுது சிவகிரி மலையில் உற்பத்தியாகி வரும் முல்லையாறும் சதுரகிரி மலையில்  உற்பத்தியாகி வரும் பெரியாறும் கலக்கும் ஓரிடத்தில் அணைக்கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதுதான் முல்லை பெரியாறு அணை 1886 -ல் சென்னை ராஜதாணி கவர்னர் ஹாமில்டன் முன்னிலையில் தமிழகமும், கேரளமும் இணைந்து 999 ஆண்டுகளுக்கு அணைக்கப்பட்ட தொடங்கி 10.10.1895-ல் திறப்பு விழா நடந்தது. அணையை கட்டத்தொடங்கிய கிழக்கு இந்திய கம்பெனி போதிய நிதிஇல்லை என கைவிட்ட நிலையில் பென்னி குக்  நான் பிறந்தது ஒரு முறை தான் அதற்குள் எனது லட்சியத்தை அடைவேன் என்று கூறி தன்னுடைய நாட்டுக்குச்சென்று தன் மனைவியின் நகைகள் மற்றும் சொத்துக்களை எல்லாம் விற்று பணம் கொண்டு வந்து அணையை கட்டிமுடித்தார். 1979 -ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணையில் விரிசல் என்று கூறியது கேரள அரசு.ஆனால் அணையை பலப்படுத்த தமிழக அரசு சுமார் 26.75 கோடி செலவிட்டது. 2000-ம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள கல்லனை நல்ல ஸ்திர தன்மையோடு இருக்கின்றது. அதேபோல் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள முல்லை பெரியாறு அணை நல்ல நிலையில் தான் உள்ளது. அதை இடிக்க தேவையில்லை என்கிற மத்திய நிபுணர் குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கடைபிடிக்க கேரள அரசு முன்வர வேண்டும். முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள கேரள போலீசை அகற்றிவிட்டு அணையின் முழு பாதுக்காப்பினையும் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து செயல்பட  வேண்டியும், கேரள அரசு முல்லை பெரியாறு சேதபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டாலோ, புதிய அணை கட்ட முயற்சித்தாலோ, அந்நடவடிக்கைகளை மத்திய அரசு கைகட்டி  வேடிக்கை பார்க்காமல் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வுக்காண வலியுறுத்தி மூவேந்தர் முன்னேற்றக்கழகம் மாபெரும் போராட்டத்தை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, தேசிய ஒற்றுமையும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறது.  இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்