தமிழகத்தில் புலிகள் முகாம்களா? இலங்கை பிரதமர் திடீர் பல்டி

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      உலகம்
Rajapaksa

 

கொழும்பு,மார்ச்.- 13 - தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இருப்பதாக இலங்கை பிரதமர் ஜெயரத்னே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரே பல்டியடித்து விட்டார்.  இலங்கையில் வெளியான 2 பத்திரிக்கை செய்திகளை நம்பித்தான் தான் அவ்வாறு கூறியதாகவும் இலங்கை பிரதமர் விளக்கமளித்துள்ளார். 

முன்னதாக இவர் கூறியிருந்த கருத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. தமிழக காவல் துறையும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இலங்கை பிரதமர் ஜெயரத்னே தான் அவ்வாறு கூறியது தவறு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். பத்திரிக்கைகளை நம்பி அவ்வாறு கூறி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புலிகள் முகாம் இல்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவரும் தற்போது உறுதி செய்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: