முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு விவகாரம் அமைச்சர் சிதம்பரம் திடீர் பல்டி

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 19 - முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கூறிய கருத்தை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென்று வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே. இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றி பேசினார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் கூறுகையில் முல்லைப்பெரியாறு அணை உடைந்துவிடும் என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஒரு இடைத்தேர்தலை பற்றிதான் அவர்களுக்கு அச்சம் என்று கூறினார். ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு கேரள அரசியல்வாதிகள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் தாமஸ், கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி பேசக்கூடாது. இதுகுறித்து பிரதமரிடம் புகார் செய்வோம் என்றார். முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கக்கூடாது. இதுகுறித்து பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் எடுத்துக்கூறுவோம் என்றார். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில் கூறுகையில், சிதம்பரம் கருத்து குறித்து சோனியா காந்தியிடம் கூறுவோம் என்றார். கேரள மாநில மாநில முன்னாள் முதல்வரும் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான அச்சுதானந்தன் கூறுகையில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும் என்றார். கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் எம்.ஐ.ஷாநவாஸ், பி.டி.தாமஸ், மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம்.சுதீரன், இடது கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், மாநில முன்னாள் அமைச்சர் பிரேமச்சந்திரன், கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணி ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றுக்காலையில் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். வந்த பிறகு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது- முல்லைப்பெரியாறு  அணை விவகாரத்தில் கேரளா பயப்படுவதற்கு காரணம் அணை குறித்து அல்ல. இடைத்தேர்தல் பயம்தான் என்று கூறியதை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மற்றவர்கள் பேசுவது மாதிரிதான் சாதாரணமாக நான் பேசினேன். இந்த வார்த்தை தேவையில்லாதது. யாரையும் புண்படுத்துவதற்காக இதை நான் கூறவில்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இரண்டு மாநில மக்களும் சேர்ந்து சகோதரத்துவ முறையில் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. நாம் அனைவரும் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். முல்லைப்பெரியாறு அணைகுறித்து பயப்படுவதை நியாயப்படுத்த முடியாது. அதேசமயத்தில் அணை குறித்த அச்சத்தை போக்குவது நமது கடமை. அணை பாதுகாப்பு குறித்த கவலை கேரளாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும்தான். 3 பேர் நீதிபதிகள் குழுவின் அறிக்கை வரும் வரைக்கும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு கூறும் வரைக்கும் நாம் அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்