முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரூராட்சி வளர்ச்சித்திட்டங்கள் குறித்து கே.பி.முனுசாமி ஆய்வு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,டிச,- 22 - நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பேரூராட்சிகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேற்று சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர், ஷீலா பாலகிருஷ்ணன், பேரூராட்சிகளின் இயக்குநர், மா.சந்திர சேகரன், மற்றும் இணை இயக்குநர், செயற்பொறியாளர்கள் அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், உதவி சொற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களின செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. பேரூராட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.143.99 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 19 ஆயிரத்து 691 பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழக முதல்வர் அறிவுரையின் படி மேற்கண்ட பணிகள் அனைத்தும் 31.13.2012-க்குள் முடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார். மேலும் அனைத்து திட்டப் பணிகளின் பயன்பாடுகள் பொது மக்களுக்கு விரைவில் சென்றடையும் வகையில் திட்டங்களை துரிதப்படுத்திட கேட்டுக் கொண்டார். அனைத்து பேரூராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் வழங்கிட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. 10 பேரூராட்சிகளில் நவீன இறைச்சிக் கூடங்கள் அமைத்திடவும், அண்ணாமலை நகர் மற்றும் புகளூர் பேரூராட்சிகளில் எரிவாயு தகன மேடைகள் அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளியில் மனிதக் கழிவு செய்வதை அறவே ஒழிக்கபப்ட வேண்டும் என்பதால் தனிநபர் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். பேரூராட்சிகளில் 440 பிளாஸ்டிக் சாலை பணிகள் ரூ.51.55 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து குளம் மற்றும் ஏரிகளில் மழைநீரை சேகரித்து வைத்திடவும் கட்டிடங்களில் உரிமம் வழங்கும் போது மழைநீரை சேகரித்து வைக்க கட்டுமானம் உள்ளதென்பதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
பேரூராட்சிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வைப்புத் தொகை பெறாமல் மாதாந்திர குடிநீர் கட்டணம் மட்டும் வசூலித்து குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கிடவும் அமைச்சர் அறிவுறுத்தினார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்