முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடும் வீரர் பிந்த்ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, டிச. - 22 - இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. 1954 -ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 41 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு உள்ளது. கலை, இலக்கியம், அறிவியல் , பொதுச்சேவை, ஆகியவற்றுக்குத் தான்  பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருதை வழங்குவதற்காக விதியில் திருத்தம் கொ  ண்டு வரப்பட்டது. சமீபத்தில் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது. அதன் படி, இனி விளையாட்டு வீரர்களும் பாரத ரத்னா விருதை பெற முடியும். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சசின் டெண்டுல்கர், முன்னாள் ஹாக் கி வீரர் தயான்சந்த் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக் கானுக்கு தேசிய ரைபிள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. இது தொ டர்பாக தேசிய ரைபிள் சங்க பொதுச் செயலாளர் பல்ஜித் சேத்தி கூறி யதாவது - நாட்டின் உயரிய பாரத ரத்தனா விருதை அபினவ் பிந்த்ராவுக்கு வழங்க வேண்டும் என்று விளையாட்டு அமைச்சர் அஜய் மக்கானுக்கு தே சிய ரைபிள் சங்கம் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. 104 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிந்த்ரா பெற்று உள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதன் மூலம் துப்பாக்கி சுடும் போட்டிக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். அபினவ் பிந்த்ரா 2008 -ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். தற்போது அவர் பயிற் சிக்காக ஜெர்மனியில் இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமையாகும் என்றார் அவர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்