முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், டிச. - 26 - இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று துவங்கு கிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலை மையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் முதல் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங் குகிறது. மே.இ.தீவு அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொ  ண்டு இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும், 4 - 1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. எனவே இந்திய வீரர்கள் அந்த உற்சாகத்துடன் இந்தத் தொடரில் பங் கேற்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் விளையாடுவது அதற்கு கூடுதல் பலமாகும். ஆகையால் அந்த அணி கடும் சவாலை அளிக்கக் கூடும். ஆகவே, இந்திய வீரர்கள் இந்தத் தொடரில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும். அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறனையு ம் வெளிப்படுத்தி ஆடவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை பேட்டிங்கே பலமாகும். சேவாக் மற் றும் காம்பீர் இருவரும் நல்ல துவக்கத்தை அளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து டிராவிட், டெண்டுல்கர் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடவேண்டும். 6 -வது வீரராக யாரை களம் இறங்குவது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. விராட் கோக்லி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரு க்கு இடையே இதற்கான போட்டி நிலவுகிறது. பயிற்சி ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இதில் கோக் லி சதம் அடித்தார். முதல் டெஸ்டில் ஆடுவது யார் என்பது குறித்து போட்டி துவங்கும் போது தான் தெரிய வரும். வேகப் பந்து வீச்சைப் பொறுத்தவரை ஜாஹிர்கான் மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் முதலில் பந்து வீசுகிறார்கள். ஆனால் இருவரது உடற் தகுதியும் கேள்விக் குறியாகியுள்ளது. 3-வது வீரராக உமேஷ் யாதவ் இறங்குகிறார். சுழற் பந்து வீச்சைப் பொறுத்தவரை ஓஜா மற்றும் அஸ்வின் இருவரி ல் ஒருவர் அணியில் இடம் பெறக் கூடும். இதில் ஓஜாவிற்கு நல்ல டெ ஸ்ட் அனுபவம் உள்ளது. எனவே அவருக்கு இந்த டெஸ்டில் அதிகம் வாய்ப்பு உள்ளது. 

ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் கிளார்க், அறிமுக வீரர் எட்கோவ ன் மற்றும் வார்னர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் மூத் த வீரர்களான பாண்டிங், மைக் ஹஸ்சி ஆகியோர் நன்றாக இல்லை. தவிர, துவக்க வீரர் வாட்சன், ஜான்சன் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் காயமடைந்து உள்ளனர். வேகப் பந்து வீச்சிற்கு பீட்டர் சிட்லே, பட்டி ன்சன், மற்றும் ஹில்பென்ஹாஸ் ஆகியோர் உள்ளனர். ஆஸி. அணியைப் பொறுத்தவரை வேகப் பந்து வீச்சே அதன் பலமாகும். சுழற் பந்து வீச்சிற்கு நாதன் லியான் உள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு ஆகிறது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்