முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவம் ஆட்சியை பிடிக்க அனுமதிக்க கூடாது: சர்தாரி

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச. 27 - ராணுவம் ஆட்சியை பிடிப்பதை மக்கள் அனுமதிக்க கூடாது என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தெரிவித்தார். அந்நாட்டு அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சர்தாரியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. முகமது அலி ஜின்னாவின் 136 வது பிறந்த தினத்தில் உரையாற்றிய சர்தாரி, தேர்தல் முறையே மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாகும். தங்களின் ஜனநாயக மற்றும் அரசியல் உரிமைகளை காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார். 

நமது நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டால் தை தடுக்க உதவி செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைவர் மைக் முல்லனுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் சர்தாரிக்கோ, பிரதமர் கிலானிக்கோ எந்த பங்கும் இல்லை என்று அரசு மறுத்துள்ளது. எனினும் இதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக அந்நாட்டின் ராணுவ மற்றும் உளவு துறை தலைவர்கள் கூறியுள்ளனர். 

இதற்கிடையில் ராணுவம், நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று பிரதமர் கிலானி தெரிவித்தார். அரசுக்கு ஒரு தனி அரசாக ராணுவம் செயல்பட கூடாது என்று கிலானி தெரிவித்திருந்தார். அந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் தலைமை தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி மறுத்துள்ளார். இந்நிலையில் அதிபர் ஜர்தாரியும், பிரதமர் கிலானியும் தனித்தனியாக ஏற்பாடு செய்திருந்த விருந்துகளை தளபதி கயானி புறக்கணித்தார். அவருடன் ராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளும் விருந்தை புறக்கணித்திருந்தனர். எனினும் முப்படை தளபதிகள் குழுவின் தலைவர் ஜெனரல் காலித், கடற்படை மற்றும் விமானபடை தளபதிகள் விருந்தில் பங்கேற்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரபூர்வமாக ஏற்பாடு செய்திருந்த விருந்தை ராணுவ தலைமை தளபதி புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்