முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

லண்டன், டிச. 28 - இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் இந்திய மாணவர் ஒருவரை இனவெறி காரணமாக ஆசாமிகள் சுட்டுக் கொன்றனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் லான்காஸ்டர் பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று படித்து வருபவர் இந்தியாவை சேர்ந்த அனுஜ்பித்வி(23). இவரை பார்ப்பதற்காக கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு இவரது நண்பர்கள் 10 பேர் பல்கலைக் கழகத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக அனுஜ்பித்வி நடந்து சென்றுள்ளார். அப்போது ஆசாமி ஒருவர் அவர்களை வழிமறித்துள்ளார். பின்னர் அந்த ஆசாமி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அனுஜ்பித்வியை சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பியோடினான். 

இது குறித்து அனுஜ்பித்வியின் நண்பர்கள் கூறுகையில், இந்திய மாணவர்கள் மீது சிலர் எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு இருந்து வருகின்றனர். எனவே இது இனவெறி காரணமாக நடந்த சம்பவமாக இருக்கலாம் என்றனர். போலீஸ் தரப்பில் கூறுகையில் இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடந்தது கிடையாது. இது மிகவும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என்று குறிப்பிட்டனர். இந்த சம்பவம் மான்செஸ்டர் நகரில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்