முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காடு விபத்து - பாராளுமன்றம் இரங்கல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. 28 - பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள். இவர்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 25 ம் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் ஒரு குடும்பத்தினர் படகில் சுற்றுலா சென்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த படகு கடல் முகத் துவாரத்தில் திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 22 பேர் பலியானார்கள். இவர்களில் 21 பேரது உடல்கள் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் பழவேற்காடு விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான இரங்கல் குறிப்பை சபாநாயகர் மீராகுமார் வாசித்தார். உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதே போல் கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா மறைவுக்கும் பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு லோக்பால் மசோதா மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பேசிய பா.ஜ.க.வினர் இது பலவீனமான மசோதா என்று பேசினார்கள். கூட்டாட்சி முறைக்கு முரணாக உள்ளது என்று சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார். ஆனால் அவரது கருத்தை மத்திய அமைச்சர் மறுத்தார். இது வலுவான மசோதா என்று அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்