முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேர் கருகி பலி

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர். டிச.29 - சிவகாசி அருகே ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வி.சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த காளியப்பன் மகன் மாரியப்பனுக்கு சொந்தமான ஆறுமுகம் கேப் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு நான்கிற்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஒரு அறையில் கேப்ரோல் தயாரிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறையிலிருந்த 6 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் பெரியவாடியூரைச் சேர்ந்த குணசேகர் மகன் சங்கரலிங்கம்(50), காளிமுத்து மகன் முருகேசபிள்ளை(65), சதானந்தபுரத்தைச்சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (70), பெரியவாடியூரைச்சேர்ந்த ராமசாமிபிள்ளை மகன் சுந்தர்ராஜன்(55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதமாபமாக பலியாகினர்.

மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்பையா பிள்ளை மகன் தர்மர் பிள்ளை(60), மாரியப்ப பிள்ளை(60) ஆகியோர் படுகாயமைடந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா நேரில் சென்று பார்வையிட்டு விபத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். மருந்து கலவைகளில் ஏற்பட்ட உராய்வே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் சிவகாசி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago