முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயல் எதிரொலி: தென் மாவட்ட ரயில்கள் ரத்து

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - தானே புயல் எதிரொலியாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்த பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 மணி நேரம் தாமதமாக பல ரயில்கள் வந்தன. முத்துநகர், மங்களூர், பொதிகை, கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்னைக்கு தாமதமாக வந்தன. சென்னையிலிருந்து திருச்சி செல்ல வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. கன மழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக ரயில் ரத்து செய்யப்படுகிறது.புதுவையிலிருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்தாகியுள்ளது. சென்னை புதுச்சேரி பயணிகள் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் புதுச்சேரி செல்லாமல் மீண்டும் சென்னைக்கேத் திரும்புகிறது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலும் கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மன்னார்குடியில் இருந்து nullநீடாமங்கலம், தஞ்சாவூர் வழியாக சென்னை செல்லும் ரெயிலும், காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயிலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விருதாச்சலம், விழுப்புரம் மெயின் லைன் வழியாக இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து  மாலை 4.05 மணிக்கு கிளம்ப வேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 6 மணிக்கு புறப்பட்டது. மேலும் வழக்கமான பாதையில் அல்லாமல் விருத்தாசலம், திருச்சி மார்க்கமாக செல்லும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் ரயில் 5.30 மணிக்கு பதிலாக 8 மணிக்கு புறப்பட்டது.  தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு புறப்பட்டது. சென்னை​ காரைக்கால், சென்னை​மன்னார்குடி ரயில்கள் இருமார்க்கங்களிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்