முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை பிரச்சனை: தஞ்சை மாவட்டத்தில் கடையடைப்பு

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

தஞ்சை, ஜன.- 4 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அராஜக போக்கை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடந்தது. முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் புதிய அணை கட்டவேண்டும் என்று கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியது. இந்த நிலயில் தமிழக அரசு அணையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவேண்டும் என்று கூறி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் முல்லை பெரியாறு பிரச்சனையில் சீரான போக்கை கடைபிடிக்காத கேரள மத்திய அரசுகளை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை அரசியல் கட்சிகளும், வியாபாரிகளும் தொடர்ந்து நடத்திவருகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தக்கோரியும் ஒரு நாள் முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று ஓட்டல் சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தஞ்சை மாவட்ட வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சையில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தஞ்சை மாவட்டம் முழுவதுமே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டம் முழுவதுமே வெறிச்சோடி கிடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்