முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசவத்தின் போது மனைவி, குழந்தை இறந்ததால் டாக்டர் கொலை

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, ஜன - 4 - தூத்துக்குடி 3.வது மைல் காமராஜர் நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி டாக்டர் சேதுராம லட்சுமி (வயது 50). இவர் மருத்துவக்கல்லூரி செல்லும் வழியில் கிளீனிக் நடத்தி வருகிறார். பின்புறம் அவரது வீடு உள்ளது.
டாக்டர் சேதுராம லட்சுமி, நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தார்.அப்போது மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல், டாக்டர் சேதுராம லட்சுமியை சூழ்ந்து கொண்டு அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் கிடைத்தும் தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரன், ஏ.எஸ்.பி. சோனல் சந்திரா மற்றும் தென்பாகம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். டாக்டர் சேதுராம லட்சுமி கொலைக்கான காரணங்கள் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் விபரம் வருமாறு: தூத்துக்குடி ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் மகேஸ் (27). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நித்யா (21). கர்ப்பினியான இவர் டாக்டர் சேதுராமலட்சுமியிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. மேலும், பெண்ணின் வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். தாயை காப்பாற்ற குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடிவு செய்யப்பட்டதாம். கடந்த 30ம் தேதி அறுவை சிகிச்சையின்போது நித்யாவிற்கு வலிப்பு வந்ததுள்ளது. மிகவும் சிக்கலான நிலையில், இதனை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடிவு செய்யப்பட்டது. அங்கு சென்ற சிறித்து நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மனைவி இறந்ததால் ஆத்திரமடைந்த மகேஸ், தனது நண்பர்கள் ஆவுடையாபுரம் இஸ்மாயில் மகன் அப்பாஸ் (27), நீலச்சந்திரன் மகன் ராஜா (27), வேல்சாமி மகன் குருமுத்து, ஆகியோருடன் சேர்ந்து டாக்டர் சேதுராமலட்சுயை அவரது கிளினிக்கில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளனர். கொலையாளிகளில் மூவரை போலீசார் நேற்று காலை கைது செய்துள்ளனர். மகேஸ்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தூத்தக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ்டுபட்டனர். அரசுமருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படுகிறது.  கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் பேரணியாகச் சென்று  தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பேரணியில் இந்திய மருத்துவர் சங்கச் செயலாளர் நந்தகுமார், அரசு மருத்துவர்கள் சங்கம் டாக்டர் குமரன் ஆகியோர் தலைமையில் 75 பெண் டாக்டர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்பி ராஜேந்திரன் அவர்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்