முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் குளிர்சாதன படபிடிப்பு தளம்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 7 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (6.1.2012) தலைமைச் செயலகத்தில், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட, குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள படப்பிடிப்புத் தளம், சுமார் 120 அடி nullநீளமும், 60 அடி அகலமும் கொண்டது.  இத்தளம் 2 சிறிய படப்பிடிப்பு கூடங்கள், 3 ஆடைமாற்றும் அறைகள், தையல் கூடம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டமைப்பாகும்.  இப்படப்பிடிப்பு தளம் சிறந்த ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.  குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இப்படப்பிடிப்பு தளம் தமிழகத்திலேயே மிகப்பெரிய படப்பிடிப்பு தளமாகும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த படப்பிடிப்புத் தளம் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இப்புதிய படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்புகள் நடைபெறும்போது, தனியார் படத் தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்களையும், தொழில்நுட்பங்களையும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவியர் அறிந்து கொள்ளவும், அதுகுறித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் ஏற்படும். முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் மக்கள் நல சிறப்பு திட்டங்கள், அரசின் சாதனைகள், முதலமைச்சர் கலந்து கொண்ட விழாக்கள், வழங்கிய நலத்திட்ட உதவிகள், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்புகள், தொழில் வல்லுநர்களுடனான சந்திப்புகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை வைக்கும் வண்ணம்,  சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை பிரதான (6​வது) நுழைவு வாயிலின் இரண்டு பக்கங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 14 லட்சம் ரூபாய் செலவில் புகைப்பட மாடம் உருவாக்கப்பட்டுள்ளது.  அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (6.1.2012) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையால் 14 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்பட மாடத்தினை திறந்து வைத்தார்.இந்நிகழ்வின்போது, செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை  அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்