முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், 5 மாநிலங்களில் 12ந் தேதி முதல் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

நாமகல் ஜன.- 7 - தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடக ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் சுமார் 4 ஆயிரத்துகும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் உள்ளன. 3 ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் சமையல் எரிவாயுவை பல்வேறு பகுதியில் உள்ள சிலிண்டர்களில் கேஸ் நிரப்பும் மையங்களுக்கு கொண்டுசெல்கிறது. கடந்த ஆண்டு அடோபர் 31 க் தேதியுடன் வாடகை ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும், ஆயில் நிறுவனங்களுக்கும் இடையே புதிய வாடகை ஒப்பந்தம் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். செயலாளர் கார்த்தி, பொருளாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் 12 ந் தேதி நள்ளிரவு முதல் தென்மண்டலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. இது குறித்து சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில், ஆயில் நிறுவனங்கள் புதிய வாடகை ஒப்பந்தத்தை இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் கடந்த மாதம் ஆயில் நிறுவனங்கள் அறிவித்த டெண்டரில் 4100 வாகனங்கள் பங்கேற்று உள்ளன. அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் ஆயில் நிறுவனங்கள் இதை ஏற்கவில்லை. உரிய பதிலும் இன்னும் தெரிவிக்கவில்லை. எனவே அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும். புதிய வாடகை ஒப்பந்தத்தை விரைவில் அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 12 ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு தலைவர் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்