முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

தேனி, ஜன,10 - பின்னர் நிதி அமைச்சர் பேசுகையில்,தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்தில் இன்று நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அனைத்து நலத்திட்ட உதவிகளும் தமிழக மக்களின் ஓட்டு மொத்த ஆதரவுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு ஒவ்வொரு திட்டமும் படிப்படிகயாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதையும் எண்ணற்ற பலத்திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார். அன்றாட ஏழை, எளிய மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு இன்று தமிழக முழுவதும் 20 கிலோ அரிசி விலையில்லா அரிசியாக வழங்கப்பட்டுவருகிறது. 

தமிழக அரசின் ஒவ்வவொரு திட்டமும் கடை கோடியில் உள்ள ஏழைக்குடிமகன் பயனடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை ரூ. 500டி- லிருந்து ரூ.1,000டி- ஆகவும், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ. 25,000டி-மும் அத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ. 50,000டி-மும், அத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும்,  மேலும், மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயில அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொயுைம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத எண்ணற்ற பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் வேளாண் குடிமக்களிலிருந்து ஏழை, எளிய மக்கள் வரை ஏதாவது தமிழ அரசின் திட்டத்தின் மூலம்  பயன்பெற்று வருகின்றனர்.

முல்லைப்பெரியார் அணையை பொறுத்தமட்டில் 1979 வருடத்திலிருந்து கேரள அரசு அச்சத்தை காட்டி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்ற தண்ணீரை 142-அடியிலிருந்து 136-அடியாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழக அரசின் தீவிர முயற்சியால் நன்கு பலப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 142-அடியாக உயர்த்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தீப்பளித்தது. 5 மாவட்ட மக்களின் வாழ்வதரத்ததை கருத்தில் கொண்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. 999 வருடங்கள் ஒப்பந்தத்தில் 112 ஆண்டுகள் முடியுற்ற நிலையில் கேரள அரசு பல் காரணங்களை  காட்டி தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்து புதிய அணை கட்டும் முயற்சியில் ்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 

தமிழக முதல்வர் நேற்று முல்லைப்பெரியார் அணையை உருவாக்கிய ஆங்கிலேயே ராணுவ பொறியாளர் கர்னல். பென்னிகுவிக் அவர்களுக்கு தேனி மாவட்டத்தில் லோயர் கேம்பில் உள்ள தமிழ்நாடு மின்சரா வாரிய வாளகப்பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பில் ரூ. 1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டுள்ளதற்கு தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆருண், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் லாசர், மாவட்ட ஊராட்சித்தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் ஆண்டி, கம்பம் நகர்மன்றத்தலைவர் சிவக்குமார், தேனி நகர்மன்றத்தலைவர் முருகேசன், தேனி நகர்மன்ற துணைத்தலைவர் காசிமாயன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இராஜா, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஸ்ரீதேவி மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நல அலுவலர்  பரமசிவம், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, உத்தமபாளையம் ஒன்றியகுழுத்தலைவர் தீபாவளிராஜ், சின்னமனுனூர் நகர்மன்றத்தலைவர் சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், போடி நகர்மன்ற தலைவர் பழனிராஜ், மாவட்ட துணைசெயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்