முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டுகோள்

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.11 - புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு தாராளமாக நிதி தாரீர் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 30.12.2011 அன்று கடலூர் கடற்கரையை கடந்த தானே' புயல், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங் களில் உள்ள கட்டமைப்புகளையும், பயிர்களையும், வீடுகளையும் வரலாறு காணாத அளவிற்கு சேதப்படுத்தியுள்ளது.

இந்தப் புயல் நமது மக்களின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளியதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும் சூறையாடிச் சென்றுவிட்டது. இந்தப் புயல் ஆயிரக்கணக்கான மரங்களை சாய்த்துவிட்டது. மின் கட்டமைப்புகளை இந்தப் புயல் உருக்குலைத்ததன் விளைவாக, கடலூர் மாவட்டத்தில் மின் மற்றும் குடிnullநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மொத்தத்தில், 4 லட்சம் குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன 2 லட்சம் ஹெக்டேருக்கு மேலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட முந்திரி மற்றும் பலாத் தோப்புகள் நாசமடைந்து விட்டன. தமிழ்நாடு அரசின் விரைவான நடவடிக்கை காரணமாக புயல் பாதிக்கப்பட்ட பகுதிகள் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை அளிப்பதற்காக அரசு இயந்திரம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளளது. வாரண உதவிகளை அளிக்கவும், அடிப் படைக் கட்டமைப்புகளை உடனடியாக சீராக்கவும் 850 கோடி ரூபாய் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 5,249 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி வழங்குமாறு மாநில அரசு மத்திய அரசை அணுகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரண உதவிகளை எனது அரசு அளித்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழுவதுமாக மறு வாழ்வு அளிப்பது மற்றும் இந்தப் புயலால் சேதமடைந்த கட்டமைப்புகளை சீராக்குவது ஆகியவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் நிறைய  இருக்கின்றன.

தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த மாபெரும் நிவாரண மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு உதவி புரியும் வகையில், தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று பொது உணர்வு கொண்ட மக்களையும், தொழிலதிபர்களையும், அரசு சாரா அமைப்புகளையும், தரும சிந்தனையாளர்களையும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்கொடைகள் அனைத்தையும் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வரைவோலை (வங்கிகள் தரகுத் தொகையை வசூலிக்காது) மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி' என்ற பெயரில் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பலாம்.

அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை 600 009. நன்கொடையாளருக்கு அலுவல் முறை ரசீது அனுப்பி வைக்கப்படும். இந்த நன்கொடைக்கு, வருமான வரிச் சட்டம் 80 (ஜி)ன் கீழ்

100 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்